Tuesday, July 26, 2011

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

வெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.

ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கோதுமை ரொட்டி :நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (ஆ4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறால் மீன் மற்றும் நண்டு : அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

தேநீர் : தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி :சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்


இப்படிக்கு... தென்றல்

சோரியாசிஸ் நோயும், மருத்துவமும்


சோரியாசிஸ் என்பது ஒரு வகை தோல் நோய். இது குறித்து விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்துவதர்காக, மதுரையை சேர்ந்த சகோதரி ஒருவர் "http://jayonline.blogspot.com/" என்கிற பிளாக் ஆரம்பித்து உள்ளார். அவரது வலைத்தளத்தில் இந்நோய்க்கான காரணங்கள், மருத்துவ முறைகள், உணவு முறைகள், மற்றும் எண்ணற்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன. இந்நோய் குறித்து அறிய விரும்புபவர்களும், நோயால் பாதிக்கப்பட்டவர்களும், http://jayonline.blogspot.com/ என்கிற தளத்தில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளவும்.

நன்றி
இப்படிக்கு... தென்றல்

Wednesday, July 13, 2011

காய்கறிகளின் வயாகராமுருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.

மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு.

தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.

பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது.

முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

காமத்தன்மை கொண்ட புடலங்காய்இது சற்று நீரோட்டமுள்ள காய். ஆகை யினால் இது சூட்டு உடம்புக்கு ஏற்றதாகும். உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். குளிர்ந்த தேகத்துக்கு ஆகாது.

இது ஒரு சத்துள்ள உணவாகையால் கிடைத்தபோது வாங்கி சமைத்து உண்ணலாம்.

மேலும் இது பத்தியத்துக்கு மிகவும் சிறந்த காய். எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த, கபங் களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றைப் போக்கும். வாத, பித்தங்களை அடக்கி வீரிய புஷ்டியைக் கொடுக்கவல்லது. இதனால் ஏற்படும் தீமைக்கு கடுகுப் பொடி, கரம் மசாலா மாற்றறாகும்.

இந்தக் காயை உண்டால் காமத்தன்மை பெருகும்

பளபள கூந்தலுக்கு....

எல்லா   பெண்களும்   அடிக்கடி   முடி  உதிராத,  நீண்ட,  பளபளப்பான,  பொடுகு   இல்லாத  கூந்தல்  வேண்டும் என்ற  ஆசை  நிச்சயம்  இருக்கும்.  நீங்களும்  கூந்தல்  அழகியாக  சில டிப்ஸ்:

  •  ஒரு  கையளவு  வேப்பிலை  எடுத்து  4 கப்   தண்ணீரில்  நன்கு  கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த  தண்ணீரால் தலையை  அலசி வந்தால்  பொடுகு  வராமல்  தடுக்கலாம்.  வினிகரை  தலையில்  தடவி  குளித்து  வந்தாலும் பொடுகு  தொல்லை  குறையும்.
  • வெந்தயம்,  வேப்பிலை,  கறிவேப்பிலை,  பாசிபருப்பு,   ஆவாராம்  பூ   ஆகியவற்றை   வெயிலில்  காய  வைத்து மெஷினில்  நன்கு  பொடித்துக்  கொள்ளுங்கள்.   இந்த   பொடியை  ஷாம்புக்கு  பதிலாக   வாரம்  இருமுறை  கூந்தலில்  தேய்த்து  அலசி  குளியுங்கள்.  உங்கள்  கூந்தல்  பளப்பளக்க தொடக்கிவிடும்.
  • ஹேர்  டிரையரை அதிகம்  உபயோகிக்காதீர்கள்.  அப்படி செய்தால்  தலை  வறண்டு,  முடியின்  வேர்களும்  பழுதடைந்து  போய்விடும்.  மேலும்,  அதிக  கெமிக்கல்   நிறைந்த  ஷாம்பூ,  ஹேர்  கலர்  ஆகியவற்றை  பயன்படுத்தாதீர்கள்.
  • இரவு  படுக்கைக்கு  செல்லுமுன்  ஆலிவ்  ஆயிலை  தலையில்  தடவி  ஊறவிட்டு,  மறுநாள் காலையில் குளித்து  வந்தால் பேன் தொல்லையில்  இருந்து  விடுபடலாம்.
  • தலைக்கு  குளித்த பின்னர்,  ஒரு  கப் தண்ணீரில்   1/2  கப்  வினிகரை  கலந்து  தலையில் தேய்த்து  அலசவும்.  பின்  அப்படியே  துண்டால்  தலையில் கட்டிக் கொள்ளவும்.  15 நிமிடத்திற்கு ஊற  விடுங்கள்.  பின்பு,  பேன் சீப்பால் சீவினால்  தலையில் இருக்கும்  ஈறு  எல்லாம்  வந்துவிடும்.  2   வாரத்திற்கு  ஒருமுறை   இப்படி  செய்து   வந்தாலே   போதும்.  பேன்  தொல்லையிலிருந்து  முற்றிலும்  விடுபடலாம்.
  • முட்டையின்   வெள்ளைக்  கருவை  நன்கு அடித்து,  தலையில்  தேய்த்து  ஊறவைத்து,  மாதம் 2  முறை  அவ்வாறு  செய்து குளித்து வந்தால்  போதும்.  கூந்தல்  பளபளக்க  ஆரம்பித்து  விடும்.
  • கறிவேப்பிலை,  மருதாணி   இரண்டையும்  அரைத்து  தலையில்  தேய்த்து  குளித்து  வந்தால்  இளநரையை  தடுக்கலாம்.  மாதம்  இரு  முறை  இவ்வாறு  செய்தாலே  போதும்.  
இந்த  வழிமுறைகளை  பின்பற்றினால் நீங்களும்  கூந்தல்  அழகி  தான்!

மனித உடல்

மனித  மூளை  40  ஆயிரம்  வருடங்களாக  இதே  அளவில்தான்  இருக்கிறது. 40   ஆயிரம்   வருடங்களில்  முலையின்  மேல்   மெலிதான  'மையலின்'   என்ற  ஜவ்வு   மட்டுமே  வளர்ந்துள்ளது.  முலையின்   எடை    1.2  கிலோவாகும்.  மூளை  10   ஆயிரம்   கோடி   நியூரான்கள்   என்ற  நரம்புச்  செயல்பட்டால்   வினாடிக்கு    1.1  கோடி   பதிவுகளைச்   செய்யமுடியும்.

தலைமுடியின்    எண்ணிக்கை   ஒரு  லட்சம்.  மனித  உடலில்   மொத்தம்  50  லட்சம்   ரோமக்கால்கள்   உள்ளன.

மனிதனின்  கண்   ஒரு  உயிருள்ள   கேமராவாகும்.  இதன்  மூலம்  2.5  கிலோ  தூரம்  வரை  பார்க்க  முடியும்.  லாக்ரிமல்    என்ற   சுரப்பியால்தான்   கண்களில்   கண்ணீர்   சுரக்கிறது.

மனித  உறுப்புகளிலே  மனிதன்   இறக்கும்    வரை  வளர்வது   காது   மட்டுமே. மனிதன்  200  வருடம்   வாழ்ந்தான்   என்றால்   அவனது   ஒவ்வொரு   காதும்  பனைமட்டை   விசிறி   அளவுக்கு  வளர்ந்திருக்கும்.  நமது  காதின்  மூலம்  20  முதல்  20  ஆயிரம்  ஹெர்ட்ஸ்  துடிப்புகள்   கொண்ட  ஒளியை  கேட்க முடியும்.

மனிதனுக்கு   மூக்கு  அவசியமான  ஒன்று.  மனிதன்  காடுகளில்   வாழ்ந்த   காலங்களில்   இரைகளை   நுகர்ந்து   பார்த்து   வேட்டையாட   மூக்கு  உதவி  செய்தது.
மூக்கின்  உட்புறத்தில்  எபிலிதியல்  என்ற  திசுவில்   10   ஆயிரம்   நிசப்பட்டர்   என்ற   செல்கள்   உள்ளன.

இந்த  செல்களால்தான்   நாம்   துர்நாற்றத்தையும்   நறுமணத்தையும்  உணர  முடிகிறது.  மொத்தம்  மனிதனால்  ஏழு  வகையான   வாசனைகளை  மட்டுமே  உணர  முடியும்.  மற்ற  வாசனைகள்  எல்லாம்  இந்த   ஏழும்  சேர்ந்த  கலவைதான்.

மனிதனது   பற்களில்  மிகவும்  கெட்டியானது  ' எனாமல்'  என்ற  பொருள்தான்.  மனிதனை  எரித்து   சாம்பலாக்கி   பல  ஆண்டுகள்  ஆனாலும்  கூட  பற்கள்  மட்டும்  அப்படியே  வடிவம்  மாறாமல்  இருக்கும்.  இதற்கு  பல்லின்  மீது  இருக்கும்  எனாமலே   காரணமாகும். 

மனிதனது  நாக்கு  9  ஆயிரம்  சுவை  மொட்டுக்கள்  கொண்டது.   உப்பு, சர்க்கரை,  புளிப்பு,  கசப்பு   ஆகிய  நான்கு   சுவைகளை  மட்டுமே  நாக்கு  அறிந்துகொள்ள முடியும்.  நான்கும்  சேர்ந்த  வெவ்வேறு   கலவைகளை   தந்து  நமக்கு   வேறு  வேறு   ருசிகளை   அறிகிறோம்.

மனித  உடலில்  மொத்தம்  206  எலும்புகள்  உள்ளன.  இவை   மட்டுமல்லாமல்
100   கிராம்  இதயம்,   12.5   லிட்டர்  தண்ணீர்,  5.5   லிட்டர்  இரத்தம்,  15   நாட்களுக்கு  ஒரு முறை கூட்டணுவும்,  86 நாட்களுக்கு  மூளையில்  உள்ள  புரோட்டினும், 14 வருசத்திற்கு எலும்புலுள்ள   கால்சியமும்   புதுப்பிக்கப்படுகின்றன.  மேலும்  ரத்தத்தில்   உள்ள   சிவப்பணுக்கள்   ஒரு  வினாடிக்கு  30  லட்சம்  புதுப்பிக்கப்படுகிறது.  மனிதன்  தனது  வாழ்நாளில்  20  வருடங்கள்   தூங்குகிறான்.  3  லட்சம்   கனவுகள்  காண்கிறான்.

வீட்டு வைத்தியம்

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு – உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு – உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு – இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு – இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு – ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில்  ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.