கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கேட்கக் கூச்சப்படும் முக்கியமான கேள்வி செக்ஸ் பற்றி தான். கர்ப்பத்தின் போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா? என்பது தான். அப்படி செக்ஸ் வைத்துக் கொள்வது என்றால் எப்போது வைத்துக் கொள்ளலாம் என்ற குழப்பமும் அவர்களை ஆட்டுவிக்கும். கரு உருவான முதல் மூன்று மாதங்கள் சரியான பிடிப்பின்றி இருக்கும். அந்த மாதங்களில் 'அபார்ஷன்' ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். அதனால் தான் அப்போது பஸ், ஆட்டோ, டூ வீலர் போன்ற வாகனங்களில் செல்வது மட்டுமல்ல, செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். அதே போல கடைசி மாதமான ஒன்பதாவது மாதத்திலும் செக்சை தவிர்ப்பது நல்லது.
குழந்தை பிறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது நோய்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் தவிர்ப்பது நல்லது. இந்த நான்கு மாதங்களை தவிர மற்ற ஐந்து மாதங்களில் தாராளமாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளலாம். இதுவும் கூட சாதாரணமாக கர்ப்பம் அடைந்திருக்கும் பெண்களுக்குத்தான் பொருந்தும். கருப்பையில், கரு தங்காமல் தொடர்ந்து திரும்ப, திரும்ப 'அபார்ஷன் ' ஏற்படும் பெண்கள், கர்ப்பப்பை பலவீனமாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலம் முடியும் வரை செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
இப்படிக்கு... தென்றல்
No comments:
Post a Comment