வெற்றிகரமான தாம்பத்தியத்தை ஏற்படுத்த ஏற்ற யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றை கணவனும், மனைவியும் ஒருங்கே சென்று கற்றுக் கொள்வது நல்லது. யோகாசனம் மனிதன் தன்னை அறிந்து கொள்ளச் செய்யும் ஒப்பற்ற கலை. எந்த நோயும் தலைகாட்டாது எப்போதும் உற்சாகமாக இருக்கலாம். இளமையோடும், ஆரோக்கியத்தோடும், நீடுழி வாழலாம்! உரிய ஆசான் மூலமாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.
அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் யோகாசனம் பயில வேண்டும். வெறும் வயிற்றோடு இறுக்கமில்லாத ஆடை அணிந்து பயில வேண்டும். குறிப்பாக உறவுக்கு செல்லும் முன்னதாக ஆசனங்களை புரிந்து விட்டு உணவு சாப்பிட்ட பிறகு சற்று ஓய்வு எடுத்த பிறகு படுக்கை அறைக்கு செல்லலாம்.
அடிப்படை ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஆசனங்களிலேயே தாம்பத்திய சக்தியும் இருக்கிறது. ஆயினும் யோக சக்தியை அதிகமாக தூண்டுவதற்கு சில ஆசனங்கள் உள்ளன என்று சென்னை அரும்பாக்கம் ஜெய்நகரில் வசிக்கும் யோகாசன தம்பதிகளான கே.எஸ்.இளமதி -சிவகாமி விளக்குகிறார்கள்.
உட்கார்ந்த நிலை:
பத்மாசனத்திலோ, வஜ்ராசனத்திலோ அமர்ந்து உடலை முன்பக்கமாக வளைத்து முகத்தை தரைக்கு அருகாமையில் கொண்டுச் சென்று நீண்ட சுவாசங்கள் எடுக்க வேண்டும்.
சர்வ அங்கப் பத்மாசனம்:
பத்மாசனத்தில் அமர்ந்தபடியே உடம்பை மேலே தூக்கி நிறுத்தி சுவாசிக்க வேண்டும்.
குப்த பத்மாசனம்:
பத்மாசனத்தில் அமர்ந்தபடி எழுந்து முன்பக்கமாகச் சாய்ந்து முழு உடலும் படுத்த நிலையில் தரையில் படிந்து இருக்க வேண்டும்.
சர்வ அங்க ஆசனம்:
மல்லாந்து படுத்த நிலையில் உடலை செங்குத்தாக உயர்த்தி, கைகளால் முதுகைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
உபவிஸ்த கோணாசனம்:
இரண்டு கால்களையும் முடிந்த மட்டும் அகலமாக விரித்து வைத்து குனிந்தபடி இருக்கால்களையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு சுவாசிக்க வேண்டும்.
தண்டாசனம்:
கால்களை ஒட்டி நீட்டி வைத்து கைகளை பக்கவாட்டில் தரையில் ஊன்றிக்கொள்ள வேண்டும். பிறகு வயிற்றுத் தசைகளை உள்ளும் புறமும் அசைத்து ஆழ்ந்த சுவாசங்களை எடுக்க வேண்டும்.
பத்த கோணாசனம்:
ஒருகாலை நீட்டியும் ஒருகாலை மடக்கியும் வைத்துக்கொண்டு நீட்டிய காலை குனிந்து இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு வயிற்றுத் தசைகளை உள்ளும்புறமும் அசைத்துச் சுவாசிக்க வேண்டும்.
பசானாசனம்:
இரண்டு உள்ளங் கால்களையும் ஒட்டினாற்போல வைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் கால்களைப் பற்றிக்கொண்டு குனியவேண்டும்.
நாபி ஆசனம்:
குப்புறப்படுத்துக் கொண்டு கைகால்களை உயரத் தூக்கிய படி முன்னும் பின்னும் உடலை அசைக்க வேண்டும்.
நின்ற நிலை உட்டானாசனம்:
நின்ற நிலையில் குனிந்து கைகளால் கால்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு சுவாசிக்கவும்.
பார்சுவ கோணாசனம்:
நின்ற நிலையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து இன்னொரு கையை தலையை ஒட்டி வைத்து சுவாசிக்கவும்.
மண்டியிட்ட நிலை வஜ்ராசனம்:
மண்டியிட்டமர்ந்து சுவாசிக்கவும்.
வியாக்கிராசனம்:
மண்டியிட்ட நிலையில் கைகளைத் தரையில் ஊன்றியபடி வலது காலையும், இடது கையையும் உயர்த்தி நிறுத்தி சுவாசிக்கவும். பிறகு கைகால்களை மாற்றி உயர்த்தி சுவாசிக்கவும். இந்த ஆசனம் இனவிருத்தி உறுப்புகளுக்கு அதிக ரத்த ஓட்டத்தை தரும். இது ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவை நீக்கும்.
சிரசாசனம்:
கைகளை தலைக்கு மேலே மலக்கி வைத்து கால்களை மேலே தூக்கி நிறுத்தி சுவாசிக்கவும்.
தனுர் ஆசனம்:
குப்புறப்படுத்த நிலையில் கைகளால் கால்களைப் பற்றிக் கொண்டு முன்னும் பின்னுமாகவும், பக்கவாட்டிலும் சாய்ந்து ஆடவேண்டும். இன விருத்தி உறுப்புகளை இந்த ஆசனம் பலப்படுத்தும்.
நவுக்காசனம்:
மல்லாந்து படுத்த நிலையில் கைகால்களை மேலே உயர்த்தி வைத்து படகுபோல நின்று சுவாசிக்கவும்.
புதிதாக மணவாழ்வில் அடி எடுத்து வைக்க இருக்கும் மணமக்கள் திருமணத்திற்கு முன்னதாகவே யோகாசனப் பயிற்சிகளை பெற வேண்டும் . நிச்சயதார்த்தம் முடிந்த உடனே இப்பயிற்சிகளை பெற்றால் அம்மணமக்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். மணமக்கள் தனித்தனியாகவோ, ஒன்றாகவோ ஆசனப் பயிற்சிகளை பெறலாம்.
இப்படிக்கு....தென்றல்
ஆசனம் more pls vist http//ngobikannan.blogspot.com all ways welcome
ReplyDelete