வளரும் குழந்தைகளுக்கு உரிய உணவு என்ன என்பது குறித்து நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாது ! ஏனென்றால் அவர்களுடைய வயது மற்றும் வளர்ச்சிக்கு தகுந்த ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் சமைத்து கொடுப்பதே ஒரு தனிக்கலை என்று சொல்லலாம். குறிப்பாக, பாஸ்ட் புட் கலாசாரத்தை, அவர்களிடம் உருவாகமல் கவனிப்பது நல்லது. மேலும், தினமும் அவர்களுக்கு 2 கப் பால், 5 பாதாம்பருப்பு, 4 பேரிச்சம்பழம், 10 வேர்க்கடலை ஆகியவை சாப்பிடக்கொடுக்க வேண்டும். இதை எல்லாம் கணக்கில் கொண்டு, உங்கள் வீட்டு செல்லக்குழந்தைகளுக்காகவே ஒரு ஆரோக்கிய உணவுப் பட்டியல் இதோ....
1 . காய்கறிகளால் உருவான ஆம்லேட்
2 . வேகவைத்த முட்டை
இவற்றில் ஏதாவது ஒரு அயிட்டத்தோடு 2 இட்லி அல்லது 2 தோசை
3 . காய்கறி சேமியா உப்புமாவுடன் ஒரு டம்ளர் பால்.
1 . இரண்டு உருளைக்கிழங்கு சேர்த்த பரோட்டா
2 . கேரட், வெள்ளரிக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சைப்பழம் கலந்த தயிர்ச்சாதம்
3 . வெஜ் புலாவ்
4 . பூரியுடன் கடலைக் கூட்டு
5 . சப்பாத்தி மற்றும் வெஜ் குருமா
6 . சாதம் மற்றும் காய்கறிக் கூட்டு
இதில் ஏதாவது ஒரு வகையை செய்து கொடுக்கலாம். அசைவ உணவு சாப்பிடுவோராக இருந்தால் ஒரு துண்டு மீன் அல்லது கறி அல்லது சிக்கன் கொடுக்கலாம்.
மாலை
1 . வெஜ் கட்லட்
2 . தயிர் வடை
3 . வெஜ் ரோல்
4 . உருளைக்கிழங்கு போண்டா
5 . வெஜ் சாண்ட்விச்
இதில் ஏதாவது ஒரு ஆயிட்டத்துடன் ஒரு கப் தக்காளி சூப்.
இரவு
1 . சப்பாத்தி, பருப்புக்கூட்டு மற்றும் ஒரு கப் தயிர்.
2 . காய்கறி, பரோட்டா மற்றும் ஒரு கப் தயிர்.
3 . காய்கறியுடன் கூடிய ரவை உப்புமா மற்றும் ஒரு கப் தயிர்.
4 . காய்கறி சேர்த்த தோசை மற்றும் ஒரு கப் தயிர்.
5 . காய்கறி கலந்த நூடுல்ஸ் மற்றும் ஒரு கப் தயிர்.
இவற்றில் ஏதாவது ஒரு அயிட்டம் செய்து கொடுக்கலாம் மேற்கண்ட பட்டியல் பிரகாரம் தினமும் உங்கள் மழலைச் செல்வங்களுக்கு கொடுத்து வந்தால், அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இப்படிக்கு...தென்றல்
No comments:
Post a Comment