பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை நிர்ணயிப்பது பெண்கள் சாப்பிடும் சாப்பட்டில்தான் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் நடத்திய ஆராய்ச்சி மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில் மேற்கத்திய நாடுகளில் சமீப காலமாக அதிக அளவில் பெண் குழந்தைகள் பிறந்து இருப்பதற்கும் ஆண் குழந்தைகள் பிறப்பது குறைந்து போனதற்கும் பெண்கள் கொழுப்பு குறைவான உணவை சாப்பிடுவதும், காலை உணவை தவிர்ப்பதும் தான் காரணம் என்று குறிப்பிட்டு உள்ளது.
பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இ, மற்றும் பி.12 ஆகியவை அதிகம் உள்ள உணவை பெண்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். பெண்கள் செரியல் ( அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களாலான உணவு ) அதிகமாக சாப்பிட வேண்டும். வாழைப்பழம் அதிகமாக சாப்பிடவேண்டும். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும் 400 கலோரி சத்து உள்ள உணவை தினமும் சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பியானோ மார்யூஸ் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சியை நடத்தினார்கள்.
செவ்வாழையில் குழந்தை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது. மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் பாதிப்பிலிருந்து படிபடியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சரியாகும். குறைவான உயிரணுக்களின் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
இப்படிக்கு... தென்றல்
தகவலுக்கு நன்றி முயற்சி பண்ணிப் பார்ப்போம்....
ReplyDelete