Tuesday, August 31, 2010

உள்ளூர் வயாக்ரா

இன்று உலகெங்கும் மருந்துக்கடைகளில் அதிகமாக விற்பனையாகும் ஒரு பொருள் "வயாக்ரா" என்றால் மிகையாகாது. இதில் எந்த அளவு நன்மை உள்ளதோ அந்த அளவு எதிர்மறை பலன்களும் உள்ளடங்கி இருக்கின்றன. நம் ஊரிலியே எளிதில் கிடைக்கும், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் "மேற்படி" விசயத்திற்கு ஏற்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ? சில வருடங்களுக்கு முன் "தினத்தந்தியில்" வெளிவந்த மருத்துவ செய்திக் குறிப்பு வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் தினசரி சாப்பிடும் சாதரண சமையலுக்கு பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.

பெருங்காயம் : ஆண்மைக்குறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனிய விறுவிறுப்புட்டும், உணர்ச்சிப்பெருக்கு ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் 'பெரும் காயம் ' பெருங்காயத்தால் ஆறிவிடும்.

ஏலக்காய் : ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மிளகு : மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகுக்கு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும். தாம்பத்யத்துக்கு முன்பு நான்கைந்து மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கம் : லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறிந்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். 1642 -ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லாவக்கத்தைப் பற்றி எழுத்யிருந்தார்.

பூண்டு : பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டதை எளிதில் ஜிரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜிரணமான பின்னரே, அதாவது சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தப் பணியை பூண்டு செய்வதால் பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி : இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டை இலக்கியங்களில் இஞ்சி சாறுடன், தேன் மற்றும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையைக் கலந்து சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்பட முடியும் என்று எழுதப்பட்டுள்ளதே அதற்கு சான்று.

சாதிக்காய் : சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தாம்பத்ய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.

ஓமம் : உணர்ச்சியை தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதன் விதைகளில் 'தைமால்' என்னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புளியங்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை ( ஓம விதைக்கு சம அளவில் ) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்துடன் கலக்கி, நெய், வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கலவையை, பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய உறவுக்கு முன் சாப்பிடலாம்.

வெங்காயம், முருங்கை, பாதாம்......
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், திண்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கயுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையை பெருக்கும் 'பென்-ஆயில்' உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

பாதாம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்மை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் "அமுக்காரா கிழங்கை" செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.

இது எல்லாம் ஏன். கடையில் 25 காசுக்குக் கிடைக்கும் கடலை உருண்டைக்கு கூட ஆண்மையப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்சனைகள் பறந்தோடிவிடும் என்று விஷயம் அறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இப்படிக்கு... தென்றல்

No comments:

Post a Comment