Tuesday, August 31, 2010

உள்ளூர் வயாக்ரா

இன்று உலகெங்கும் மருந்துக்கடைகளில் அதிகமாக விற்பனையாகும் ஒரு பொருள் "வயாக்ரா" என்றால் மிகையாகாது. இதில் எந்த அளவு நன்மை உள்ளதோ அந்த அளவு எதிர்மறை பலன்களும் உள்ளடங்கி இருக்கின்றன. நம் ஊரிலியே எளிதில் கிடைக்கும், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் "மேற்படி" விசயத்திற்கு ஏற்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ? சில வருடங்களுக்கு முன் "தினத்தந்தியில்" வெளிவந்த மருத்துவ செய்திக் குறிப்பு வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் தினசரி சாப்பிடும் சாதரண சமையலுக்கு பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.

பெருங்காயம் : ஆண்மைக்குறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனிய விறுவிறுப்புட்டும், உணர்ச்சிப்பெருக்கு ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் 'பெரும் காயம் ' பெருங்காயத்தால் ஆறிவிடும்.

ஏலக்காய் : ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மிளகு : மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகுக்கு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும். தாம்பத்யத்துக்கு முன்பு நான்கைந்து மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கம் : லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறிந்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். 1642 -ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லாவக்கத்தைப் பற்றி எழுத்யிருந்தார்.

பூண்டு : பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டதை எளிதில் ஜிரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜிரணமான பின்னரே, அதாவது சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தப் பணியை பூண்டு செய்வதால் பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி : இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டை இலக்கியங்களில் இஞ்சி சாறுடன், தேன் மற்றும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையைக் கலந்து சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்பட முடியும் என்று எழுதப்பட்டுள்ளதே அதற்கு சான்று.

சாதிக்காய் : சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தாம்பத்ய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.

ஓமம் : உணர்ச்சியை தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதன் விதைகளில் 'தைமால்' என்னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புளியங்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை ( ஓம விதைக்கு சம அளவில் ) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்துடன் கலக்கி, நெய், வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கலவையை, பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய உறவுக்கு முன் சாப்பிடலாம்.

வெங்காயம், முருங்கை, பாதாம்......
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், திண்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கயுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையை பெருக்கும் 'பென்-ஆயில்' உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

பாதாம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்மை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் "அமுக்காரா கிழங்கை" செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.

இது எல்லாம் ஏன். கடையில் 25 காசுக்குக் கிடைக்கும் கடலை உருண்டைக்கு கூட ஆண்மையப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்சனைகள் பறந்தோடிவிடும் என்று விஷயம் அறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இப்படிக்கு... தென்றல்

மனித குரோமோசோம்கள்

மனிதனுக்கு மட்டும்தான் 23   ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. மனிதனின் மூதாதையர்கள் என்று போற்றப்படும் சிம்பன்சி குரங்குகளுக்கு 24  ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. அவற்றை போலவே கொரில்லா, உராங் உட்டாங் குரங்கு வகைகளுக்கும் 24   ஜோடி தான் உள்ளது.


மனிதனுக்கு ஒரு ஜோடி குரோமோசோம்கள் குறைகிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 23  குரோமோசோம்களில்  இரண்டாவது ஜோடி  குரோமோசோம்  மட்டும், மற்ற எல்லாவற்றையும்  விட பெரிதாக இருக்கும். ஏப் என்ற மனித குரங்குகளின் இரண்டு ஜோடி குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி  விட்டதன் விளைவுதான்  இந்த ஆறறிவு மனிதன்.

மனிதன் ஒரு உன்னத படைப்பு என்பது கொஞ்சம் உண்மைதான். ஏனென்றால் மனித மூளையால் மட்டுமே பிரபஞ்சத்தின்  ஆரம்ப தோற்றத்தைப் பற்றி சிந்திக்க முடிகிறது. இந்த அறிவு  வேறெந்த  ஜீவராசிகளுக்கும்  ஒரு போதும் கிடையாது. உன்னத படைப்பு  என்பது மனித மூளை  தானா ...? என்றால் இல்லை.

அது ஒரு தனித் தன்மை. அந்த தனித்தன்மை என்பது பரிணாம   வளர்ச்சிதத்துவத்திற்கு  மிக முக்கியம். ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு தனித்தன்மையைக் கொண்டிருக்கும். மனிதனின் தனித்தன்மை சிந்திப்பது. ஏப் வகை குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான். அந்த வகை குரங்கில் இருந்து மனிதனாக உருமாற சுமார் 1.5  கோடி  வருடங்கள் ஆனது. ஒரு குரங்குக்கும்  மனிதனுக்கும்  வேறுபாடுகள் அதிகம் இல்லை.  24  குரோமோசோம்கள், 23 ஆன பின்புதான், மனிதனுக்கு தனி வடிவம் கிடைத்தது. அதன் உடம்பில் ஏகப்பட்ட ரோமங்கள், தலை வேறு வடிவமாக இருக்கிறது. கை கால்களெல்லாம் நீளம். ஆனால் அடிப்படை அமைப்பில் அதற்கும் மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 32  பற்கள், இரண்டு கண்கள், கை, கால்களில் 5  விரல்கள், கல்லிரல், ஈரமற்ற சருமம் முதுகெலுப்பு  எல்லாம் ஒரே மாதிரிதான். சிம்பன்சி குரங்கின் மூளையில் உள்ள எல்லா ரசாயன பொருட்களும் மனித மூளையிலும் உண்டு. ஜீரண அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்ட அமைப்பு, சுரப்பிகள் எல்லாம் ஒன்று தான்.

மத்திய ஆப்பிரிக்காவில் மனிதனும், குரங்கும் 3   லட்சம் வருடங்களுக்கு  முன்பு ஒரு மூதாதையில் இருந்து பிரிந்து, மனிதனானது. மீண்டும் குரங்காக மாறும்வாய்பெல்லாம் மனிதனுக்கு இல்லை. இந்த 3  லட்சம் வருடங்கள் என்பது மனித பரிணாம காலத்தில் ஒரு சில மணித்துளிகள் தான். ஒரு குரோமோசோம் வித்தியாசமே இத்தனை மாறுதல் என்றால், நான்கைந்து குரோமோசோம்கள்  வித்தியாசப் பட்டிருந்தால்.....ஒரு வேளை மனிதனுக்கு இரண்டு இதயமும்,  நெற்றியில்  ஒரு கண்ணும் வந்திருக்குமோ என்னவோ....

இப்படிக்கு... தென்றல்

Monday, August 30, 2010

கருவின் முதல் பயணம்

நாம் எத்தனையோ பயணங்கள் செய்திருக்கிறோம்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமான பயணங்களாய் இருந்திருக்கும். பலரும் அறிந்திராத ஒரு "கரு"வின் பயணத்தை இங்கே கொடுத்துள்ளேன்.

ஆணின் உயிரணுவும்,பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒன்றாக உருவான  கரு, ஒரேயொரு செல்லாக கடுகு அளவில் இருக்கும். இந்தக் கரு உருவான 12  மணிநேரத்தில் அந்த செல் உடைந்து  இரண்டாக   பிரியும். அப்போது  கரு கொத்த மல்லி விதை அளவிற்கு, கரு பெரிதாகும்.

அடுத்த 12  மணிநேரத்தில் இரண்டுசெல், நான்குசெல்லாக பிரியும். மிளகு அளவுக்கு பெரிதாகும் .    அடுத்தடுத்த நாட்களில்,    இரண்டிரண்டு  மடங்காக செல்கள் பிரியப் பிரிய,ஐந்தாம் நாள் நீர்க்குமிழி அளவுக்கு இருக்கும்.  6-ம் நாள் அதே கரு நெல்லிக்காய் அளவுக்கு பெரிதாக மாறும். இப்படியே 100 செல்கள்  வரைபிரித்த பின்,   பெலோப்பியன் டியூப்  என்று சொல்லக்கூடிய கருக்குழாயில் இருந்து, கரு, கருப்பையை   நோக்கி நகரத் தொடங்குகிறது. இதுதான் கருவின் முதல் பயணம் .

கரு உருவாவது பெலோப்பியன் டியூப்பில்  தான். அது கொஞ்சம் பெரிதானதும் கர்ப்பப்பைக்கு வருகிறது. உருவான இடத்தில் இருந்து கர்ப்பப்பைக்கு வந்து சேர ஒரு வார காலம் அவகாசம் தேவைப்படுகிறது. சில பெண்கள் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று 30  நாட்களில்  முடிவு எடுத்து, 'டி  அண்ட் சி' செய்து கொள்ளும் போது, கரு பெலோப்பின்  டியுப்பிலே   இருந்து,கர்ப்பபைக்கு கரு வந்து சேராமல் போய்விட, கரு கலைப்பு நடை பெறாமலேயே போய்விடும். பின்னர் நிதானமாக வந்த கரு,  கருப்பையில் தங்கி வளர தொடங்குகிறது.

சில சமயங்களில் பெலோப்பியன் டியூப்பில் உருவான கரு கருப்பையை நோக்கி நகராமல் அதே இடத்திலேயே தங்கி வளர்ந்து விடுகிறது.இதற்கு பெலோப்பியன் டியூப்பில் ஏற்படும் தொற்று நோய்கள் தான்  காரணம். சாதாரணமாக கருவால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தானாகவே நகர முடியாது. பெலோப்பியன் டியூப்பில் ஒரு பகுதி கிட்டத்தட்ட ஒரு மண் புழு போல தசைகளை சுருக்கி விரிந்து  கொடுப்பதால் தான், கரு மெதுவாக நகர்ந்து போகும். நோய் பாதிப்பு இருந்தால், சுருங்கி விரியும் தன்மை இருக்காது.

சில பெண்களுக்கு பெலோப்பியன்  டியுப்பே       வளர்ந்து நெளிந்து இருக்கும். இந்த வளைவே கருவின் முதல் பயணத்தை தடை செய்கிறது. இந்த தடை சில நேரம், உயிருக்கே ஆபத்தாக முடியும். ஒரு மெல்லிய நூல் மட்டுமே உள்ளே நுழையும் அளவுக்கே, பெலோப்பியன் டியூப் இருக்கும். இது கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னால் தாங்க முடியும் அளவுக்கு விரிந்து விரிந்து கொடுக்கும். முடியாமல் போகும் போது வெடித்துவிடும். கடுமையான வயிற்று வலியும், இரத்தப்போக்கும் ஏற்படும்.

இப்படி வெடித்து விட்டால், அந்தக் குழாய் மூலம், கருத்தரிக்கும் சந்தர்ப்பம், அந்த பெண்ணுக்கு வாழ்க்கை முழுவதுமே  இல்லாமல் போகும். மிச்சம் இருக்கும் இன்னொரு குழாய் முலமே கருத்தரிக்க முடியும்.கருவின் முதல் பயணம் மிக முக்கியமானது. அதில் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிப்பதற்கு, கருத்தரித்த உடனேயே டாக்டரிடம் சென்று சோதனை செய்து விடுவது நல்லது.

இப்படிக்கு...தென்றல்

ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி

ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை இங்கே கொடுத்துள்ளேன்.

ஒன்றாம் மாதம் :   பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாகத் தெரியும். முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.   இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் :  இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.

இரண்டாம் மாதம் :   சிசுவிற்கு முகம் உருவாகிறது.  கண் பகுதி குழி தோன்றும். மூளை,  இதயம்,  சுவாசப்பகுதி,  கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும்.  இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.

முன்றாம் மாதம் :    உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும்.  நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.

நான்காம் மாதம் :  தலைமுடி, புருவம்  போன்றவை  லேசாக  வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.

ஐந்தாம் மாதம் :   சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார்.  "லாலுனுகோ"  என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.

ஆறாம் மாதம் :   சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில்
இருந்து குழந்தை  தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை
அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

ஏழாம்  மாதம் :   குழந்தை கண் திறக்கும்.  எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.

எட்டாம் மாதம் :   நகம் வளரும். முடி வளர்ச்சி  அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி
தலைகீழாக  குழந்தை செல்லும்.

ஒன்பதாம் மாதம் :   ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.  பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.

இப்படிக்கு ...தென்றல் 

Sunday, August 29, 2010

எண்ணெய் குளியல்


நல்லெண்ணெய் என அழைக்கப்படக்கூடிய எள் எண்ணெயிலிருந்து நமக்கு  கிடைக்கும் பயன்களைப் பட்டியலிட்டாலும் போதாது அந்தளவிற்கு  நல்லெண்ணை  நமக்குப் பயன்படுகிறது. நோயற்று நூறு ஆண்டுகள் வாழ  நமது முன்னோர்கள் நமக்கு உறுதியிட்டு  சொன்னவைகள்  நான்கு. 

1) தினமும் இருமுறை மலம் கழித்திட வேண்டும் 
2) வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் 
3)மாதம் இருமுறை கலவி செய்தல் வேண்டும் (வயது வந்தவர்களுக்கு  மட்டும்  கூறப்பட்டது) 
4) வருடம் இருமுறை 'பேதிக்கு'  போகவேண்டும்  (வயிற்றினுள்  இருக்கும்  கழிவுகளை  அகற்ற வேண்டும்) 

இதில் மற்றவைகளை தற்போது விட்டுவிடுவோம், இரண்டாவதாக  கூறப்பட்டுள்ள  "வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்" என்ற  வாக்கை  நம்மில்  யாராவது இதுவரை கடைப்பிடித்ததுண்டா? 

குளித்துப்பாருங்கள் உங்களுக்குப்புரியும் அதன் ஆனந்தம். உடலின் மொத்த  சூடும்  குறைந்துவிடும். கண்கள் எரியாது. தொண்டை அடைப்பு நீங்கிவிடும். தோல்  சம்பந்தமான  வியாதிகள் ஓடிவிடும். உங்கள் வாழ்வு நீண்ட நாட்கள் நீடித்திருக்கும்  என்பதில்  எள்ளளவும்  ஐயமில்லை.

கிராமத்திலிருப்பவர்கள் மட்டுமே எண்ணெய் தேய்த்து குளிக்க முடியும் என நினைத்து நகரத்திளிருப்பவர்கள் ஒதுக்கித்தள்ளி விடாதீர்கள். நகரத்திலிருப்பவர்களும் ஒய்வு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். மறக்காமல் குளியலறையில் நுழையும்போது ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் கொண்டு போய் உடலின் மறைவான பாகங்களிலும் தேய்த்து சற்று நேரம் எண்ணெய் இறங்கவிட்டு குளிக்கவும்.

இப்படிக்கு.. தென்றல்

ஆண்மையின் எதிரி - வெந்நீர் குளியல்

அதிகாலையியேயே எழுந்து  வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் குளிக்கப்  பயன்படுத்துவது வெந்நீர். இதை  எப்பொழுதாவது குளிக்க பயன்படுத்தலாமே  தவிர,தினமும் பயன்படுத்துவது  ஆபத்தில்  போய் முடியும் என்று  ஆண்களை எச்சரிக்கின்றனர்  மருத்துவர்கள்.

அதாவது, ஆண்களின்  விதைப்பையில்  உயிரணுக்கள் அதிகம் உற்பத்தியாக, அந்த விதைப்பையில், உடலின் வெப்ப அளவை விட,குறைவான வெப்ப அளவு  தான் இருக்க வேண்டும். வெந்நீரில் தொடர்ந்து குளிக்கும்போது விதைப்பையின் வெப்ப அளவு அதிகரித்து,அதனால் அங்கே உயிரணுக்கள் உற்பத்தி குறைந்து விடுகிறது. அதனால், தினமும் வெந்நீரில் குளிப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும் இருக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் அணிவதும், விதைப்பையை அழுத்தத்திற்கு உள்ளாக்கி உயிரணுக்கள் உறப்பத்தியை குறைத்துவிடுகிறது. அதனால் மிகவும் இருக்கமான ஆடைகளை தவிர்த்து, சற்று தளர்வான  ஆடைகளை   அணிவதே ஆண்களுக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் அந்தக்காலத்தில் நதிகளிலும், ஏரி, குளங்களிலும் நீராடி, எப்போதுமே சற்று தளர்வான ஆடைகளை அணிந்து வந்தார்கள் போலும்.

நன்றி.. தென்றல்

குழந்தை பேறு அடைய அவசியமான வைட்டமின் -ஈ

ஒரு தம்பதியர் குழந்தைப்பேறு  அடைய அவர்கள் இருவரது உடலிலும் வைட்டமின் ஈ சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். அந்தச் சத்து போதிய அளவில் இல்லையென்றால் இருவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைப்பது தள்ளிப்போகும்.

 ஆணுக்கு விந்தணுக்கள் குறைபாடும், பெண்ணுக்கு மலட்டுத் தன்மையும் ஏற்படலாம். அதையும் மீறி இச்சத்து குறைபாடு கொண்ட ஒரு பெண் கருத்தரித்தல் கருச்சிதைவு ஏற்படலாம்.

அவர்கள், வைட்டமின் ஈ அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பச்சைநிற காய்கறிகள், கீரைகள், தானியங்கள், கொட்டைகள், முளைகட்டிய தானியங்கள்,அவரை,தக்காளி, கோதுமை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் ஈ சத்து அதிகம் காணப்படுகிறது.

மருத்துவரின் ஆலோசனைபெற்று மருந்து கடைகளில் கிடைக்கும் வைட்டமின் ஈ மாத்திரைகளை வாங்கி பயன்பெறலாம். இருந்தாலும், மேலே கூறிய உணவு வகைகள் ஒரு சிறந்த தீர்வாகும்.

இப்படிக்கு தென்றல்

கர்ப்பிணிப்பெண்கள் மீன் அதிகம் சாப்பிட்டால் நல்லது.

கர்ப்பிணிப்பெண்கள் மீன் அதிகம் சாப்பிட்டால். அது வயிற்றில் வளரும்   குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் ஸ்டன் நகரில் உள்ள ஹாவார்டு மருத்துவ பள்ளியின் டாக்டர் .எமிலி  ஓக்கேன் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். அப்போது அவர் மீன்களின் உள்ள ஒமேகா -3   என்ற சத்து குழந்தையின்  மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது. 341 பெண்களிடம்  நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்வதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது தமிழகத்தில் கர்பிணிப்பெண்களுக்கு மீன் கறி சாப்பாடு தரபட்டுள்ளதற்கு  பல்வேறு  சான்றுகள் இன்றும் பல பாட்டிமார்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.  

மேலைநாடுகளில் அரசாங்கம் பல கோடிகள் செலவுசெய்து மீன்கள் இருக்கும் நீர் நிலைகளிலிருந்து (கடல் சாராத) நீர் மற்றும் மீனை எடுத்து சோதனை செய்து பாதரசத்தின் அளவை கண்டுபிடித்து தன மக்களுக்கு எந்த நீர்நிலையின் மீனை உண்ணலாம், அல்லது உண்ணக் கூடாது என தெளிவுபடுத்துகிறது. ஆனால் இயற்கையிலேயே நல்ல வளம் நிறைந்த நமது நீர்நிலைகளில் இருந்தி பிடிக்கப்படும் மீன்களுக்கு இத்தகைய சோதனைகள் தேவையில்லை என்பதுதான் முற்றிலும் உண்மை.

அதனால் நமது ஊர்களில் கிடைக்கும் மீனை யாரும் விருப்பப்பட்டால், தைரியமாக சாப்பிடலாம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அங்கு கிடைக்கும் கடல் மீன்கள்   அல்லாத  மற்ற நீர்நிலைகளிலிருந்து (ஏரிகள், குளங்கள்) பிடிக்கப் பட்ட மீன்களை  அரசு  தரச்சான்றிதல்களை  சரிபார்த்து  வாங்கி சாப்பிடவும்.
இப்படிக்கு...தென்றல்

நெருஞ்சியின் மருத்துவ பயன்கள்


நெருஞ்சியின் மருத்துவ பயன்கள்
சிறிய தாவரமாக இருந்தாலும் அறிய மருத்துவ குணங்கள் கொண்ட நெருஞ்சியை பற்றி இங்கே பார்ப்போம்.

நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து 1/2 லிட்டர் நீரிலிட்டு  பகுதியாக  காய்ச்சி  60மில்லி அளவு உட்கொண்டுவர  பெண்களின்  கர்ப்பப்பை  கோளாறுகள்  நீங்கி குழந்தைப்பேரு ஏற்படும். 

நெருஞ்சி வேரையும், காயையும் பச்சரிசியுடன் சேர்த்து வேகவைத்து  அதை  வடிகட்டிய கஞ்சியுடன் சர்க்கரை சேர்த்து குடித்துவர நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், உடல் சூடு  ஆகியவை தணியும். 

நெருஞ்சி முள்ளைமட்டும் சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.

நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.

சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். 

சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி சமூலத்துடன்  (முழுச்செடி) நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும். 

நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு  நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும். 

நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூபடையாத  பெண்கள் பூபெய்துவர். 

நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும்.

நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து  வைத்துகொண்டு அதில்  2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.

நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.

முழு நெருஞ்சிச்செடி, மாவிலங்கப்பட்டை, சிறுகண்பீளை இவை  மூன்றையும்  ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கல் அடைப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும். 

நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து ஆகியவை  உள்ளன.  நெருஞ்சி முள் ஆண்மையை பெருக்கும் சக்தி கொண்டது. இதன் இலை  சிறுநீரை பெருகச்செய்வதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும்.

நன்றி: த. உதயதாரகை (சித்த மருத்துவர்) மற்றும் தினத்தந்தி

Saturday, August 28, 2010

சித்த மருத்துவம் - சில குறிப்புகள் (1)

உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் இரத்த இரத்த அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.


இரத்த சோகையை போக்க: பீர்க்கங்காய் மற்றும் அதன் கொடியின் வேறை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.

அன்புடன் தென்றல்

மருத்துவமும், பழமொழியும்

`ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்று ஒரு பழமொழி உண்டு. வழக்கம்போல் இந்த பழமொழிக்கும் பல வழிகளில் பொருள் கொள்கிறார்கள்.

இதன் உண்மையான பொருள் : இன்னொருவரின் மகளான மருமகளுக்கு சத்தான உணவுகளை உண்ணக்கொடுத்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளையான பேரப்பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் இந்த பழமொழியின் ஆழ்ந்த பொருள்.

அதாவது, கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணை நன்றாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த பழமொழி.

ஒரு கர்ப்பிணிப் பெண் கர்ப்பக்காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை போன்றவற்றை அந்த காலக்கட்டத்தில் வழக்கத்தைவிட சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், சுகப்பிரசவத்திற்கும், தேவையான அளவு தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி மாலைமலர்

Friday, August 27, 2010

சமையல் வகைகள்

1) 20 வகை தோசைகள்
2) 30 வகை காலைச்சிற்றுண்டிகள்
3) 30 வகை "சைடு டிஷ்" கள்
4) 30 வகை "வெரைட்டி ரைஸ்"
5) 30 வகை பஜ்ஜி மற்றும் பக்கோடா வகைகள்
6) 30 வகை பிரியாணி
7) 30 வகை போண்டா மற்றும் வடைகள்
8) 30 வகை சப்பாத்திகள்
9) 30 வகை "பருப்பு உணவுகள்"
10)30 வகை சிறப்பு தோசைகள்
11) 30 வகை முட்டை சமையல்
12) 30 வகை "பழங்களால் செய்த உணவுகள்"
13) 30 வகை "அழகான மற்றும் ஆரோக்கியமான" உணவுகள்
14) 30 வகை "ஐஸ் கிரீம்கள்"
15) 30 வகை "ஐஸ் டிஷ்கள்"
16) 30 வகை "இட்லிகள்"
17) 30 வகை "கஞ்சி"
18) 30 வகை "கூட்டுகள்"
19) 30 வகை "குழம்பு" (2 )
20) 30 வகை "எண்ணெய் குறைந்த சமையல்"
21) 30 வகை "மாம்பழ உணவு பதார்த்தங்கள்"
22) 30 வகை "பச்சடி"
23) 30 வகை "பச்சடி" (2 )
24) 30 வகை "பருப்பு மசியல்"
25) 30 வகை "பாயாசம்"
26) 30 வகை "பொடிகள்"
27) 30 வகை "பூரிகள்"
28) 30 வகை "பொரியல்"
29) 30 வகை "புட்டு"
30) 30 வகை "ரசம்"
31) 30 வகை "கிழங்கு சமையல்"
32) 30 வகை "சேமியா சமையல்"
33) 30 வகை "சூப்கள்"
34) 30 வகை "இனிப்பு உருண்டைகள்"
35) 30 வகை "இனிப்பும் காரமும்"
36) 30 வகை "சிற்றுண்டிகள்" (2 )
37) 30 வகை "தக்காளி சமையல்"
38) 30 வகை "வடைகள்"
39) 30 வகை "வெரைட்டி ரைஸ்" (2 )
40) 30 வகை "வறுவல்"

இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து சமையல் குறிப்புகளையும் எழுதிய அனைத்து சகோதரிகளுக்கும், வெளியிட்டு உலகெங்கும் கொண்டுசென்ற விகடன் பத்திரிகைக்கும், இணையத்தில் பதிவேற்றம் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி.
***கீரன்***

Thursday, August 26, 2010

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்...

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று.

எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற வகையில் தாக்கி பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோயே.

உலக அளவில் 246 மில்லியன் மக்கள் தற்போது நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருக்கின்றனர். இன்னும் 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 500 மில்லியனாக மாற வாய்ப்புள்ளது என உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்களே அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.

நீரிழிவு நோயை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகை

சிறு வயதிலிருந்தே கணையம் இன்சுலீனை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கக்கூடும். அல்லது இன்சுலின் மாறு பாட்டால் கூட இது நேரிடலாம். இவ்வகையான நீரிழிவு நோய் கடைசி வரை இருந்துகெண்டே இருக்கும்.

இரண்டாம் வகை

90 சதவிகிதம் மக்கள் இந்தவகை நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 40 வயதைக் கடந்தவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உடல் எடை கொண்டவர்கள், மன அழுத்தம் கொண்டவர்கள், உணவு மாறுபாடு கொண்டவர்கள், பரம்பரையாகவும் சிலர் இந்த வகை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்றாம் வகை

இந்த வகை திடீரென உணவு மாறுபாட்டால் ஏற்படுவதாகும். கருத்தரித்த பெண்களுக்கு இந்த வகை அதிகம் உண்டாகிறது. மகப்பேறு முடிந்தவுடன் மாறிவிடுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

· அதிகம் பசி உண்டாகும்.

· நாவறட்சி அடிக்கடி ஏற்படும்.

· உடல் சோர்வாகவே இருக்கும்.

· அடிக்கடி சிறுநீர் பிரியும்.

· கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும்.

· கண் பார்வை மங்கல் உண்டாகும்.

· பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும்.

· திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும்.

· அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும்.

· உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை இருக்கிறது என்று தெரிந்தவுடன் சிலர் பயங்கொள்ள ஆரம்பிப்பார்கள். ஆனால் பயம் தேவையில்லை.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே இந்த நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

உணவுக் கட்டுப்பாடு

நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.

உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே அற்புத மருந்தாய் வேலை செய்யும்.

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு.

இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம். காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சில உணவு வகைகள்.

வெந்தயம், உளுந்து, எள், கசகசா, கேழ்வரகு, கோதுமை, சிவப்பு அவல், சீரகம், சோம்பு, ஓமம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பட்டியல்

காலை - ஒரு கப் டீ அல்லது காஃபி (சர்க்கரை இல்லாமல்)

காலை டிபன் - இட்லி - 3, தோசை - 2, சப்பாத்தி - 2, சம்பா ரவை உப்புமா - 1 கப், மிளகு பொங்கல் - 1 கப் (இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும்)

இதனுடன் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காய சட்னி ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.

மதிய உணவு - 1 கப் சாதம், 1 கப் காய்கறி சாம்பார், காய்கறி பச்சடி, காய்கறி அவியல், மற்றும் கீரை.

மாலை - முளைகட்டிய பயறு வகைகளில் ஏதேனும் ஒன்று. 1 கப் காபி அல்லது டீ - சர்க்கரை இல்லாமல்.

இரவு உணவு - கோதுமை சார்ந்த உணவுகளான, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சட்னி வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள்.

கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய்க்கான மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்ட உடனேயே நடக்க ஆரம்பிக்கக்கூடாது. சிறிது நேரம் கழிந்த பின்னரே நடக்க வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் கூட நல்ல பயிற்சிதான்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் சம அளவு எடுத்து இலேசாக கொதிக்க வைத்து, கொதி நிலையில் கறிவேப்பிலையை போட்டு இறக்கி பாட்டிலில் வைத்துக்கொண்டு தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செய்யும் முன் கால் மூட்டுகளிலிருந்து, கீழ்த் தசைப் பகுதி மற்றும் பாதங்கள் வரை பூசிக்கெண்டு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் நடைபயிற்சி முடிந்த பின் உள்ளங்கால் பகுதியில் சிறிது எண்ணெய் தடவி வரவேண்டும். இவ்வாறுசெய்து வந்தால் கால்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் மற்றும் கால் வலி போன்றவை நீங்கி புத்துணர்வு பெறும். கால்களில் இரத்த ஓட்டம் சீராகும்.

சர்க்கரையின் அளவைக் குறைக்க

சிறுகுறிஞ்சான் - 20 கிராம்

நாவற்கொட்டை - 20 கிராம்

கறிவேப்பிலை - 20 கிராம்

மாவிலைக் கொழுந்து - 20 கிராம்

வேப்பிலை - 20 கிராம்

நிலவேம்பு - 20 கிராம்

ஆவாரை சமூலம் - 20 கிராம்

இவற்றை எடுத்து நன்றாக காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

நன்றி நக்கீரன் (ஹெல்த்)

Wednesday, August 25, 2010

சித்த மருத்துவத்தில் தேன்

சித்த மருத்துவத்தில் தேன்

சித்த மருத்துவ மருந்துகளில் ஆணி வேராக உபயோகப்படும் பொருள் தேன் ஆகும். தேனின் தனிச்சிறப்பே நாள்பட்ட நிலையிலும் கெட்டுப் போகாத தன்மையே.தேனின் நன்மைகள் பல. அது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சித்த மருந்துகளில் இதன் பயன்பாடு என்பது சிறப்பானது. ஏனென்றால் தேனோடு சேர்க்கப்படும் மருந்துகளை கெட்டுப் போகாமல் காக்கும் தன்மை கொண்டது.சித்த மருந்துகள் தயாரிக்கும் காலம் தொட்டு அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேனைப் பற்றி கூறப்பட்டுவரும் கருத்துக்கள் அனைத்தும் நவீன ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அதாவது தேன் நாள்பட்ட நிலையிலும் கெட்டுப்போவது அரிது என்ற கருத்து.இதற்கான காரணங்கள்· தேனில் நீர்த்தன்மை மிக மிக குறைவு. இதில் நீர்த்தன்மை 0.6% தான் உள்ளது· தேனில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள், அல்லது பூஞ்சைகள் வளர இயலாது. இவைகள் வளருவதற்கு நீர்த்தன்மை குறைந்தது 0.7% அல்லது 0.9 % இருக்க வேண்டும். இக்கிருமிகள் பாதிக்ககாததால் தேன் கெடாமல் வெகுநாட்கள் பாதுகாக்கப்படுகிறது.

தேனின் அடர்த்தி அதிகம். அதாவது 83% அடர்த்தி மிக்கது. 70% புரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளது.· பூக்களில் உள்ள தேனை, தேனீ பருகி, இடைவிடாத இறகு துடிப்பினால் அதில் உள்ள நீர்த்தன்மை வற்றப்பட்ட தேனை உண்ணும் போது உடலில் சுரக்கும் திரவத்தினாலும் அடர்வு மிகுந்த தேனாக தேன் கூட்டில் சேர்த்து வைக்கப் படுகிறது.நெக்டரானது தேனாக தேனீக்களால் மாற்றம் அடையும்போது ஆண்டி மைக்ரோபியல் பொருளாக ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு உற்பத்தியாகிறது. இதன் காரணமாகவும் தேன் கெடாமல் வெகுநாட்கள் காக்கப்படுகிறது.

அடர்வுத் தன்மை மிகுந்த தேனானது எந்தவித பாக்டீரியா, பூஞ்சைக் கிருமிகளையும் வளர விடாது. தேனானது அமிலத்தன்மை கொண்டது. அதாவது இதனுடைய pH அளவானது 3.2 - 4.5.

தேனில் முக்கிய உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளன. இதனாலும் நாள்பட கெட்டுப்போகாத தன்மையாலும் சித்த, ஆயுர்வேத மருந்து செய்முறைகளில் தேன் முக்கிய பங்காற்றுகிறது.

நன்றி நக்கீரன் (ஹெல்த்)

மூலத்துல சூடு இருந்தா...

மூலத்துல சூடு இருந்தா...

வாசலில் நின்ற முருங்கை மரம் சில்லென்று பூத்திருந்தது.ஓவென்று வளராமல் நின்று, விரிந்து, படர்ந்து செழித்த முருங்கை ஒட்டு ஜாதி இல்லை. நாட்டு முருங்கை. அதனால்தான் அதன் பூக்களும் இலைகளும் , காய்களும் அத்தனை ஆக்கமாக இருக்கின்றன. பல ஆண்டுகளாக வைத்தியர் வீட்டு வாசலை அழகு படுத்தி நிற்கிறது.இந்த வருஷம் காய்த்து சொரியப்போகுது... ஒரு பூக்குட வீணாகாம அத்தனையும் காயாகும் விசேஷம் இந்த முருங்கைக்கு உண்டு.மரமெங்கும் பூத்துக் குலுங்கும் முருங்கைப் பூக்களின் அழகை ரசித்தபடியே திண்ணையில் அமர்ந்திருந்தார் வைத்தியர்.இந்த வருஷம் வைத்தியர் வீட்டு முருங்கைக்காய் ஊரெங்கும் சாம்பாராய் மணக்கப்போகுது.. அப்படில்ல பூத்துக்கிடக்கு...முருங்கைப் பூக்கள் காயாகும் முன்னரே அவற்றின் மணத்தை நுகர்ந்தபடி, வந்து வைத்தியரின் திண்ணையில் அமர்ந்த அழகர்சாமிக்கு விடாமல் தும்மல் போட்டது.

என்ன அழகர்சாமி... உன்னோட குரலே கொண கொணன்னு இருக்கு.. இந்த லட்சணத்துல நீ முருங்கைக்காயின் வாசனையப் பத்தி பிரலாபிக்கிறியாக்கும்... அதுல மூக்குல முன்னூறு தும்மல் வேற...

வைத்தியரின் கிண்டலான கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் தான் வந்த காரணத்தையும் சொன்னார் அழகர்சாமி..அந்தத் தும்மல நிப்பாட்டுறதுக்குத்தானே வைத்தியரே உங்களத் தேடி வந்திருக்கேன்... விடாத தும்மலா இருக்கு.. அதுக்கு ஒரு மருந்து சொல்லுங்க வைத்தியரய்யா...

தும்மல் குறித்த விளக்கத்துடன் மருந்தை சொல்லத் தொங்கினார் வைத்தியர்...தும்மல் எதுனால வருது தெரியுமாலே... மூலச்சூடு குடலுக்கு ஏறும்போது அஜீரணம் ஏற்படும். நாசியில நீர்கட்டி வடியத் தொடங்கும். இதத்தான் மூலத்தில் சூடு இருந்தால் மூக்கதனில் நீர் வடியும்-னு சொல்றாங்க..தும்மல் சீதளத்தோட அறிகுறி இல்ல.. மூலச்சூட்டோட அடையாளம் தான்.. அதோட வெளிப்பாடுதான் தும்மலா தெரிக்குது. தும்மலை வெறும் ஜலதோஷம்னு நினைக்கிறதும் தப்பில்ல... ஆனா முக்கிய காரணம் மூலச்சூடுதான்.

அதனால மூலச்சூட்ட குறைச்சா மூக்குல வர்ற தண்ணி தானா நின்னுக்கும். இப்ப நாஞ் சொல்ற மருந்த கவனமா கேட்டுக்க..துளசி, வில்வ இலை, சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம், கற்கண்டு இது எல்லாத்தையும் நிழல்காய்ச்சலா காயவச்சி பொடியாக்கி தேன் கலந்து தொடந்து ஒரு மாசம் சாப்பிட்டு வா.. அப்புறம் தும்மல் உன் பக்கமே எட்டிப் பாக்காது.வைத்தியர் சொன்ன மருந்தை குறித்துக்கொண்ட அழகர்சாமி, விடாமல் வந்த தும்மலை அடக்க முயன்றபடியே அங்கிருந்து புறப்பட்டார்.

நன்றி நக்கீரன் (ஹெல்த்)