Thursday, December 30, 2010

தண்ணீர் ஏன் பருகுகிறோம்...?

எனக்கு  தண்ணீர்  தேவை  என்று  உடல்  கேட்பதுதான்   தாகம்.  தீராத  தாகம்   ஏற்படுவது  கோடையில்தான்!  எவ்வளவு  தண்ணீர்  குடித்தாலும்  தாகம் தீராது.

தாகம்  ஏற்படும்போது  தண்ணீர்  குடிக்க  தாமதமானால்  உடல்  சோர்ந்து போகிறது. உடலில்  இருந்து  கழிவு  வெளியேற... அதிகமாக  தண்ணீர்  குடிக்க   வேண்டும்.  தாகம்   ஏற்பட்டாலும்   சிலர்  தண்ணீர்  குடிப்பதில்லை.  இதனால்  உடம்பில்  தண்ணீர்  தன்மை  குறையும்.  இதன்  காரணமாக  சிறுநீர்  கற்கள்  தோன்றி  உடலில்  பல்வேறு  நோய்களை  உருவாக்கும்.

பிறந்த  குழந்தை   அழுதவுடன்...அம்மா  பால்  புகட்டுவார்.  பிறந்து  ஒரு வருடம்  ஆகும்வரை.....அம்மா  பால்  மூலம்  குழந்தையின்   தண்ணீர்   தேவை  ஈடுக்கட்டப்பட்டு   விடுகிறது.

அடுத்த கட்டத்தில் உணவை   ஜீரணமாக்கவும்,  உறுப்பு  வளர்ச்சிக்கும்  தண்ணீர்  தேவை.  இதனால்  பால்  தவிர்த்து  மற்ற  உணவுகளை  சாப்பிடும்போது,  குழந்தைகளுக்கு  தண்ணீர்  கொடுக்க  வேண்டும்.

அறிவு,  மனம், உடல்  என  அனைத்திற்கும் அடிப்படை  மூளை  தான்.  இதில்  90  சதவீதம்  தண்ணீர்  தொடர்புடையதாக  உள்ளது.  தண்ணீர்  இல்லாவிட்டால் மூளை  சுதந்திரமாக  இயங்காது.  உடலில்  உள்ள  மற்ற  உறுப்புகளுக்கு  எவ்வளவு  தண்ணீர்  தேவை என்பதை முடிவு  செய்வது  மூளைதான்.

மூளையின்  கட்டமைப்புக்கு   தண்ணீர்  பற்றாக்குறை   ஏற்படும்போது  மூளை  மற்ற  உறுப்புகளில்  இருந்து  தண்ணீரை  இழுக்கும்.  அப்போது  திசுக்கள்,  தசைகள்,  நாடி  நரம்புகள்  சோர்வடைந்து  விடுகின்றன.

60  கிலோ  எடையுள்ள  ஒருவர்  தினமும்   3 1/2 லிட்டர்  தண்ணீர்  குடிக்க வேண்டும். நம்  நாட்டில்  சராசரியாக  தினமும்  2 1/2 லிட்டர்  தண்ணீர்  குடிக்கின்றோம். தண்ணீர்  மற்ற  பானங்கள்  மூலம்  1000 -1200  மில்லி கிடைக்கும்.  தற்போதைய  கணக்குப்படி ஒருநாளைக்கு  நமக்கு  1  லிட்டர்  தண்ணீர்  பற்றாக்குறை  ஏற்படுகிறது.

நவீன  கண்டுப்பிடிப்பின்படி,  திசுக்களின்  ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்   திசுக்கள்  இறந்துவிடுவதால்  புற்றுநோய்  வருவதாக  அறிந்துள்ளனர்.  புற்றுநோய்  பாதிப்பு  வராமல்  இருக்க  அதிகமாக  தண்ணீர்  குடிக்க வேண்டும்.  தண்ணீரை  அதிகமாக  குடிப்பதால்  திசுக்களின்  ஆக்ஸிஜன் அதிகரிக்கிறது.  இதனால்  புற்றுநோய்  பாதிப்புகள்  ஏற்படுவதில்லை.

அதேபோல்,  மாத்திரை  சாப்பிடும்போது  தண்ணீர்  அதிகமாக குடிக்க வேண்டும். ஒரு மாத்திரைக்கு  குறைந்த  பட்சம்  125  மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு  குடிக்காவிட்டால் மாத்திரை இரைப்பை பகுதியில் எங்காவது  ஒட்டிக்கொள்ளும்.  மாத்திரையோடு குறைந்த அளவு தண்ணீர் பருகினால், அல்சர், நெஞ்செரிச்சல்  ஆகியப் பிரச்சனைகள் தோன்றும். மாத்திரை சாப்பிட்டவுடன் படுக்கவும்  கூடாது.

பருகும் தண்ணீர்  எப்போதும் மிக சுத்தமாக இருக்கவேண்டும். அதேபோல் தண்ணீரை சூடுப்படுத்தி சுகாதாரமானதாக குடிக்கும் பழக்கமும் இருக்கவேண்டும்.

நம்முடைய  தோலினை மென்மையாகவும்,  மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கு உடலில் உள்ள தண்ணீரே  உதவுகிறது.  பிறந்த குழந்தைகள் உடல் மிகவும் மென்மையாக இருக்கும்.  அதற்கு காரணமும் தண்ணீர்தான்.  பிறந்த குழந்தையின் உடலில் சுமார்  75  முதல் 80  சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருக்கும்.

முதுமையை எட்டும்போது,  உடலில் உள்ள தண்ணீர் அளவு 50  சதவீதமாக  குறைந்து விடுகிறது.  அதனால் தான் முதுமையில் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

சிலருக்கு இளமையிலும் தோலில் மென்மை குறைந்து சுருக்கம் காணப்படலாம்.  அப்படி பட்டவர்கள் தினமும் குறைந்தது 8  டம்ளர்  தண்ணீராவது  குடித்து வரவேண்டும்.  அப்போது தான் தோலில் சுருக்கங்கள்  ஏற்படுவதை  தள்ளிப்போட  முடியும்.

தண்ணீர் என்பது சாதாரணமானது இல்லை. நமது உடலுக்கு மிகவும் இன்றியமையாதது.  அதை  புரிந்துக்கொள்ள வேண்டும்.  தண்ணீரை  நிறைய  அருந்த  வேண்டும்.

நன்றி... இப்படிக்கு தென்றல்

Monday, November 1, 2010

குடும்ப வாழ்க்கைக்கு ஆனந்தம் தரும் ஆசனம்

வெற்றிகரமான  தாம்பத்தியத்தை  ஏற்படுத்த  ஏற்ற  யோகாசனங்கள் இருக்கின்றன.  அவற்றை  கணவனும், மனைவியும்  ஒருங்கே  சென்று கற்றுக்  கொள்வது  நல்லது.  யோகாசனம்  மனிதன்  தன்னை  அறிந்து  கொள்ளச் செய்யும்  ஒப்பற்ற கலை.  எந்த  நோயும்  தலைகாட்டாது  எப்போதும்  உற்சாகமாக  இருக்கலாம்.  இளமையோடும், ஆரோக்கியத்தோடும், நீடுழி வாழலாம்!  உரிய  ஆசான்  மூலமாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிகாலை  மற்றும்  மாலை  வேளைகளில்  யோகாசனம்  பயில வேண்டும்.  வெறும்  வயிற்றோடு  இறுக்கமில்லாத  ஆடை  அணிந்து  பயில  வேண்டும். குறிப்பாக  உறவுக்கு  செல்லும்  முன்னதாக  ஆசனங்களை  புரிந்து  விட்டு  உணவு  சாப்பிட்ட  பிறகு  சற்று  ஓய்வு  எடுத்த  பிறகு  படுக்கை  அறைக்கு  செல்லலாம்.

அடிப்படை  ஆரோக்கியத்திற்கு  ஏற்ற  ஆசனங்களிலேயே   தாம்பத்திய  சக்தியும்  இருக்கிறது.  ஆயினும்  யோக  சக்தியை  அதிகமாக   தூண்டுவதற்கு   சில  ஆசனங்கள்  உள்ளன  என்று  சென்னை  அரும்பாக்கம்  ஜெய்நகரில்  வசிக்கும்  யோகாசன  தம்பதிகளான  கே.எஸ்.இளமதி -சிவகாமி  விளக்குகிறார்கள்.

உட்கார்ந்த நிலை:
பத்மாசனத்திலோ,  வஜ்ராசனத்திலோ  அமர்ந்து  உடலை  முன்பக்கமாக   வளைத்து  முகத்தை  தரைக்கு  அருகாமையில்  கொண்டுச்  சென்று  நீண்ட  சுவாசங்கள் எடுக்க வேண்டும்.

சர்வ  அங்கப்  பத்மாசனம்:
பத்மாசனத்தில்  அமர்ந்தபடியே  உடம்பை  மேலே  தூக்கி  நிறுத்தி  சுவாசிக்க  வேண்டும்.

குப்த பத்மாசனம்:
பத்மாசனத்தில்  அமர்ந்தபடி  எழுந்து  முன்பக்கமாகச்  சாய்ந்து முழு உடலும்  படுத்த  நிலையில் தரையில்  படிந்து  இருக்க வேண்டும்.

சர்வ  அங்க  ஆசனம்:
மல்லாந்து  படுத்த  நிலையில்  உடலை  செங்குத்தாக  உயர்த்தி, கைகளால்  முதுகைத்  தாங்கிப்  பிடிக்க வேண்டும்.

உபவிஸ்த  கோணாசனம்:
இரண்டு  கால்களையும்  முடிந்த  மட்டும்  அகலமாக  விரித்து  வைத்து  குனிந்தபடி  இருக்கால்களையும்   இரண்டு கைகளால்  பிடித்துக்  கொண்டு  சுவாசிக்க  வேண்டும்.

தண்டாசனம்:
கால்களை  ஒட்டி  நீட்டி  வைத்து  கைகளை  பக்கவாட்டில் தரையில்  ஊன்றிக்கொள்ள  வேண்டும்.  பிறகு  வயிற்றுத்  தசைகளை  உள்ளும்  புறமும்  அசைத்து  ஆழ்ந்த  சுவாசங்களை  எடுக்க  வேண்டும்.

பத்த கோணாசனம்:
ஒருகாலை  நீட்டியும்   ஒருகாலை மடக்கியும் வைத்துக்கொண்டு நீட்டிய   காலை குனிந்து  இரண்டு  கைகளாலும்  பிடித்துக் கொண்டு வயிற்றுத் தசைகளை  உள்ளும்புறமும் அசைத்துச்  சுவாசிக்க வேண்டும்.

பசானாசனம்:
இரண்டு  உள்ளங் கால்களையும்  ஒட்டினாற்போல  வைத்துக்கொண்டு  இரண்டு கைகளாலும்  கால்களைப்  பற்றிக்கொண்டு  குனியவேண்டும்.

நாபி ஆசனம்:
குப்புறப்படுத்துக் கொண்டு  கைகால்களை  உயரத்  தூக்கிய படி முன்னும்  பின்னும்  உடலை  அசைக்க வேண்டும்.

நின்ற நிலை உட்டானாசனம்:
நின்ற  நிலையில்  குனிந்து  கைகளால்  கால்களைச்  சுற்றி  வளைத்துக்  கொண்டு   சுவாசிக்கவும்.

பார்சுவ  கோணாசனம்:
நின்ற  நிலையில் ஒரு  பக்கமாகச்  சாய்ந்து  இன்னொரு   கையை   தலையை  ஒட்டி  வைத்து   சுவாசிக்கவும்.

மண்டியிட்ட  நிலை  வஜ்ராசனம்:
மண்டியிட்டமர்ந்து   சுவாசிக்கவும்.

வியாக்கிராசனம்:
மண்டியிட்ட  நிலையில்  கைகளைத்  தரையில்   ஊன்றியபடி   வலது   காலையும்,  இடது  கையையும்  உயர்த்தி  நிறுத்தி  சுவாசிக்கவும்.  பிறகு  கைகால்களை  மாற்றி  உயர்த்தி  சுவாசிக்கவும்.  இந்த  ஆசனம்  இனவிருத்தி  உறுப்புகளுக்கு  அதிக  ரத்த  ஓட்டத்தை  தரும்.  இது  ஆண்மைக்  குறைவு,  பெண்மைக்  குறைவை  நீக்கும்.

சிரசாசனம்:
கைகளை தலைக்கு மேலே  மலக்கி  வைத்து  கால்களை  மேலே  தூக்கி   நிறுத்தி   சுவாசிக்கவும்.

தனுர்  ஆசனம்:
குப்புறப்படுத்த   நிலையில்  கைகளால்  கால்களைப்  பற்றிக்  கொண்டு  முன்னும் பின்னுமாகவும்,  பக்கவாட்டிலும்  சாய்ந்து ஆடவேண்டும்.  இன விருத்தி  உறுப்புகளை  இந்த  ஆசனம்  பலப்படுத்தும்.

நவுக்காசனம்:
மல்லாந்து  படுத்த  நிலையில்  கைகால்களை மேலே  உயர்த்தி  வைத்து  படகுபோல  நின்று  சுவாசிக்கவும்.
          
புதிதாக  மணவாழ்வில்  அடி  எடுத்து   வைக்க  இருக்கும்  மணமக்கள்  திருமணத்திற்கு   முன்னதாகவே  யோகாசனப்  பயிற்சிகளை  பெற  வேண்டும் .  நிச்சயதார்த்தம்   முடிந்த  உடனே  இப்பயிற்சிகளை  பெற்றால்  அம்மணமக்களுக்கு   திருமண  வாழ்க்கை  வெற்றிகரமாக  அமையும்.   மணமக்கள்  தனித்தனியாகவோ, ஒன்றாகவோ  ஆசனப்   பயிற்சிகளை   பெறலாம்.

இப்படிக்கு....தென்றல்

Thursday, October 14, 2010

நீண்டநாள் வாழ நீச்சல் அடியுங்கள்...

ஆறு,  ஏரி,  குளம், கடற்கரை   பகுதிகளில்   வசிப்பவர்களில்   பலருக்கு    நீச்சல்   தெரிந்திருக்க   வாய்ப்பு  உண்டு.   அவற்றை   பார்க்காதவர்களுக்கு   நீச்சல்   என்பது   எட்டாக்கனி   தான்.

இது   ஒருபுறம்  இருக்கட்டும்.  இப்படி  நீச்சல்   அடித்தால்   என்ன  பயன்  கிடைக்கிறது   என்பதை   அறிய   தெற்கு   கரோலினா   பல்கலைக்  கழக   ஆராய்ச்சியாளர்கள்  ஒரு  ஆய்வை   மேற்கொண்டார்கள்.   அதில்  இன்ப  அதிர்ச்சி   தரக்கூடிய   தகவல்  கிடைத்தது.

அடிக்கடி   நீர்நிலைகளில்   நீச்சலடிப்பவர்கள்   மற்றவர்களை   காட்டிலும்   நீண்ட  நாட்கள்   ஆரோக்கியமாக  உயிர்  வாழ்வார்கள்  என்பதுதான்  அந்த  தகவல்.

இந்த  ஆராய்ச்சியில்  அடிக்கடி நீச்சல்  பயிற்சி  பெறுபவர்களும்,  நீச்சல் மேற்கொள்ளாதவர்களும்   உட்படுத்தப்பட்டனர்.  ஆராய்ச்சிக்கு   உட்படுத்தப்  பட்டவர்களின்   உடல்  ஆரோக்கியம்,  அவர்கள்  சிகரெட்  எந்த  அளவுக்கு   புகைக்கிறார்கள்?  மது  எந்த  அளவுக்கு  அருந்துகிறார்கள்?  என்பன  போன்ற  ஏ  டூ இசட்  தகவல்களும் அந்த  ஆராய்ச்சியில்  சேகரிக்கப்பட்டன.

ஆராய்ச்சியின்  முடிவில்  அடிக்கடி  நீச்சல்  அடிப்பவர்கள்  மற்றவர்களை  காட்டிலும்  அதிக நாட்கள்  உயிர்  வாழ்வது  உறுதி  செய்யப்பட்டது.

இப்படிக்கு.....தென்றல்              

Saturday, October 2, 2010

உடல் ஒரு அதிசயம்

மனிதனின்  உடல்,  அதிசயங்கள்  நிறைந்தது.  ஒரு  வருடத்தில்  நமது  கல்லீரல்  23   பால்  லாரிகளில்  நிரப்பக்கூடிய   அளவுக்கு   இரத்தத்தை  வடிகட்டுகிறது.  உடலில்  கனமான  உறுப்பு   மூளைதான். இதன்  எடை  சுமார்  ஒன்றேகால்  கிலோ  ஆகும்.  மனித  உடலில் 60  சதவீதம் நீர்  தான்  உள்ளது.  இது  சுமார்  50  லிட்டர்  இருக்கும்.

இதயம்  24  மணி  நேரத்தில்  14   ஆயிரம்   லிட்டர்   இரத்தத்தை   1.68  கோடிமைல்  நீள  இரத்தக்  குழாகளின்  வழியே  பரவச்  செய்கிறது.  இது  உண்டாக்கும்  சக்தி  80  ஆயிரம்  கிலோ  எடையுள்ள  பொருளை  பூமியில்   இருந்து  1 அடி  உயரம்  தூக்க  போதுமானது. இதயம்  ஒரு  நாளில்  லட்சம்  தடவை  சுருங்கி  விரிகிறது.

மூளையின்  அடிப்பகுதியில்  இருக்கும்  பிட்யூட்டரி சுரப்பிதான்  உடல் வளர்ச்சியையும்  பாலின  தன்மையையும்  கட்டுப்படுத்துகிறது.  ஒரு  சிறு  பட்டாணி  அளவே  உள்ள  இது  உடலின்  பல்வேறு  பகுதிகளுடன்  50  ஆயிரம்  நரம்புகளால்   தொடர்பு    கொண்டுள்ளது.    ஒரு  மனிதன்    25   வயதில்  முழுவளர்ச்சி  பெற்று  விடுகிறான். 40  வயதிற்கு  மேல்  வளர்ச்சி  நின்று  விடுவது  மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். இது   குறுத் தெலும்புகள் காய்ந்து  போவதால்  தான்  நேர்கிறது.

நாம்  பகலை விட இரவில் தான் அதிக அளவில் வளர்கிறோம். குழந்தைகள்  கோடைக்காலத்தில் மழைக் காலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். ஒருவரது வாழ்நாளில்  இதயம் சுமார் 200 கோடி  தடவை  துடிக்கிறது. அப்போது 50 கோடி லிட்டர்  ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது உறங்கும்போது கூட மணிக்கு  340  லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.

வளர்ச்சியடைந்த ஆண் ஓய்வாக இருக்கும் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இது 200 வரை உயரும். நாடி துடிப்பு அன்பது இதயத்தின் துடிப்பையே குறிக்கும். மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20  சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17  சதுர அடி இருக்கும்.

ஒவ்வொரு  இரவிலும் தூங்கும்  போது உடலசுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சியடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கிவிடும்.உட்காரும் போதும்  நிற்கும் போதும் முதுகில் உள்ள குறுத்தெலும்புகள்  அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது.  தூங்கும்போது அழுத்தம்  இல்லாததால் நீண்டு வளர்கிறது. சராசரியாக  உடலில் 50  லட்சம் ரோமங்கள் இருக்கும்.  கருத்த முடி உடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உதடு,  உள்ளங்கை,  உள்ளங்கால்,  விரல்களின்  உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே  ரோமம் வளர்வதில்லை.

குழந்தை  பிறக்கும் போது 300  எலும்புகள் இருக்கும். இவற்றுள்  94  எலும்புகள் இளகி  மற்றவற்றுடன்  இணைந்து வளர்ந்த பருவத்தில்  206  ஆகிறது.  எடையை  தாங்குவதில்  எலும்புகள்  கருங்கல்லைவிட  உறுதியானவை.  ஒரு  தீப்பெட்டி  அளவுள்ள  எலும்பு  9  டன் எடையை தாங்கும்.  அதாவது  கருங்கல்லை  போல நான்கு மடங்கு அதிகம்.

இப்படிக்கு..... தென்றல்

Thursday, September 30, 2010

தாய்ப்பால்

பிரவசத்தை  எதிர்நோக்கிக்   காத்திருக்கும்   கர்ப்பிணிப்   பெண்களுக்கு  பல  சந்தேகங்கள்  ஏற்படலாம் .  அவற்றில்  முக்கியமானது  தாய்ப்பால்  சுரப்பு  எவ்வளவு  இருக்கும்?  என்பது.  பொதுவாக  குழந்தை  பெற்றெடுத்த  ஒரு  ஆரோக்கியமான  பெண்ணுக்கு  சுமார்  850  மில்லி  லிட்டர்  தாய்ப்பால்  தினமும்  சுரக்கும்.  இந்த  தாய்ப்பாலின்  காரணமாக  அந்த  தாயானவள்  தினமும்  சுமார்  600  கலோரியை  கூடுதலாக  இழக்க  வேண்டியது  இருக்கிறது.

சத்தான  கீரை  வகைகள்,  காய்கறிகள்,  பால்,  பழங்கள்,  புரதம்  மிகுந்த பொருட்கள்,  நீர்  போன்றவற்றை  சரியான  விகிதத்தில்  அந்த  தாயானவள்  எடுத்து  வந்தால்,  அவளது  தாய்ப்பால்  சுரப்பால்  ஏற்படுகின்ற  கலோரி  இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை  தவிர்த்து,  சத்து  குறைவான  உணவு  வகைகள்   அவளுக்கு   கொடுக்கப்பட்டால்   அவளது  உடல்  திறனும்  பாதிக்கப்படும்,  தாய்ப்பால்  சுரப்பும்  குறைந்து  விடும்.  மேலும்,  தாய்ப்பால்  ஊட்டும்  பெண்களுக்கு,  மார்பகத்தின்  அளவுக்கும்  தாய்ப்பால்  சுரப்புக்கும்  சம்பந்தம்  உண்டா?  என்ற  சந்தேகம்  ஏற்படலாம்.

உண்மையில்  மார்பகத்தின்  அளவிற்கும்,  தாய்ப்பால்  சுரப்புக்கும்  சம்பந்தமே  இல்லை.  சிறிய  மார்பகம்  கொண்ட  பெண்ணுக்கு  அதிக  அளவில்  தாய்ப்பால்  சுரப்பதற்கும்,  பெரிய  மார்பகம்  கொண்ட  பெண்ணுக்கு  குறைவான  அளவில்  தாய்ப்பால்  சுரப்பதும்  நடைமுறையில்  நாம்  காணும்  ஒன்றுதான்.

 மார்பகத்தில்  உள்ள  திசுக்களின்   எண்ணிக்கையையும்,  அவை  தூண்டப்படும்   விதத்தையும்  பொறுத்தே  ஒரு  பெண்ணுக்கு  எந்த  அளவுக்கு  தாய்ப்பால்  சுரக்கும்  என்பதை  தெரிந்துகொள்ள  முடியும்.  குழந்தைக்கு   தாய்ப்பால்  கொடுக்க  வேண்டும்  என்கிற  ஆர்வம்  கூட   அந்த  பெண்ணுக்கு  தாய்ப்பால்  சுரப்பு  திசுக்களை   தூண்டி  விடலாம்.    

குழந்தை  பிறந்ததும்  நாம்  அதற்கு  கொடுக்கும்  முதல்  உணவு  தாய்ப்பால்தான் அந்த  தாய்ப்பாலைக்  காட்டிலும்  மிகச்சிறந்த  உணவு  இந்த  உலகில்  வேறு  எதுவும்  இல்லை என்கிறார்கள்  மருத்துவர்கள்.  பிறந்த  குழந்தை  நோய்  நொடியின்றி  வளரத்  தேவையான  அனைத்து  சத்துக்களும்  தாய்ப்பாலில்  காணப்படுகின்றன. அதனால்தான்,  எல்லா  தாய்மார்களையும்  குழந்தைகளுக்கு  கண்டிப்பாக  தாய்ப்பால்  கொடுக்க  வேண்டும்.

இந்த  தாய்ப்பால்  குடித்து  வளரும்  குழந்தைகளுக்கு  இதயம்  சம்பந்தப்பட்ட  பிரச்சனைகள்  வராது  என்கிறது  ஒரு ஆய்வு.தாய்ப்பால்  மூலம்,  குழந்தைக்கு  தேவையான  கொழுப்புச்சத்து  சரிவிகித  அளவில்  கிடைப்பதுதான்  அதற்கு  காரணம்  என்கிறார்கள்  அந்த  ஆய்வை  மேற்கொண்டவர்கள்.

மேலும், முறையாக  தாய்ப்பால்  குடித்து  வளராத  குழந்தைகளுக்கு  இதயம்  சம்பந்தப்பட்ட  நோய்கள்  வருவதற்கான  வாய்ப்புகள்  அதிகம்  இருக்கின்றன என்றும்  அவர்கள் எச்சரிக்கிறார்கள்.  தாய்ப்பால்  கொடுத்தால்  அழகு  கெட்டுவிடும்  என்றெல்லாம்  கர்ப்பனை  செய்துகொள்ளும்  சில  தாய்மார்கள்,  அந்த  எண்ணத்தில்  இருந்து  தங்களை  இனியாவது  மாற்றிக்கொள்வதுதான்  நல்லது.

இப்படிக்கு... தென்றல்

Sunday, September 26, 2010

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு,  மலைகளில்  வாழ்ந்த  சித்தர்கள்  நூற்றாண்டுகளை  கடந்தும்   வாழ்தார்கள்.  நோய்கள் அவர்கள்   அருகே  வர   அஞ்சியது.  தங்கள்  ஆயுள்  ரகசியத்தை அவர்கள்  சொல்லி  இருந்தாலும்,  நாம்  தான்  அதன்படி  வாழ மறுக்கிறோம்.  18  சித்தர்களில்  ஒருவரான  தேரையார்  எப்படி  வாழ  வேண்டும்  என்பதை  ஒரு  பட்டியலே  இடுகிறார்.

மனிதன்  எதை  மட்டும்  செய்ய  வேண்டும்  என்பதற்கு   அவர்  இப்படி  சொல்கிறார் :
  •  பால்  உணவு  உட்கொள்ளுங்கள்.
  • எண்ணெய்   தேய்த்து  குளிக்கும்போது   வெந்நீரில்   குளியுங்கள்.
  • படுக்கும்போது   எப்போதும்  இடது  கைப்புறமாகவே   ஒருக்களித்து  படுங்கள்.
  • புளித்த  தயிர்  உணவை   விருப்பி   உட்கொள்ளுங்கள்.
  • பசிக்கும்போது   மட்டுமே  உணவை  உட்கொள்ளுங்கள்.
  • ஒரு  நாளைக்கு  இரண்டு  முறை  மட்டுமே  உணவு  உட்கொள்ள     வேண்டும்.
  • இரவில்  நன்றாக  தூங்குங்கள்.
  • பெண்ணுடன்   மாதம்  ஒருமுறை  மட்டுமே  உறவு  வைத்துக்கொள்ள  வேண்டும்.
  • வாழைக்காயை   உணவுக்கு  பயன்படுத்தும்போது   பிஞ்சிக்  காய்களை        மட்டுமே   பயன்படுத்த  வேண்டும் .  முற்றிய  காய்களை  கறி  சமைத்து        உண்ணக்கூடாது.
  • உணவு   உட்கொண்ட  உடனேயே  சிறிது  தூரம்   நடக்கும்   பயிற்சியை   செய்ய    வேண்டும்.
  • 6   மாதத்திற்கு  ஒருமுறை   வாந்தி  மருந்து  உட்கொள்ள  வேண்டும்.
  • 4   மாதங்களுக்கு  ஒருமுறை   பேதி  மருந்து  சாப்பிடுங்கள்.
  • 1 1/2  மாதத்திற்கு  ஒருமுறை   மூக்கிற்கு  மருந்திட்டு  சளி  போன்ற  நோய்கள்   வராமல்  பார்த்துக்  கொள்ளுங்கள்.
  • வாரம்  ஒருமுறை  முகச்சவரம்  செய்துகொள்ள   வேண்டும். ( இது  ஆண்களுக்கு  மட்டும்  )
  • 4  நாட்களுக்கு  ஒருமுறை   எண்ணெய்  தேய்த்து  குளிக்க  வேண்டும்.
  • 3  நாட்களுக்கு   ஒருமுறை   கண்ணுக்கு  மை  இட  வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)
  • விரும்பிய  தெய்வங்கள்,  குருவை  வணங்குங்கள்.
இவற்றை   எல்லாம்  ஒருவர்  தனது  வாழ்நாளில்  பின்பற்றி  வந்தால்  எமன்
அவரை   நெருங்கி  வரவே  பயப்படுவான்   என்கிறார்  தேரையார்.

எவற்றை  எல்லாம்  செய்யக்கூடாது  என்பதற்கு   தேரையாரின்   அறிவுரை : 
  • பகலில்  உடலுறவு  கொள்வதையும்,  தூங்குவதையும்  தவிர்த்து  விடுங்கள்.
  • கரும்பு  போன்ற  இனிப்பவர்களாக  இருந்தாலும்  வயதில்  மூத்த பெண்களுடனும்  இனிய  வாசம்  தரும்  தலைமுடியைக்  கொண்ட  விலைமாதர்களுடன்  உடலுறவு  கொள்ளாதீர்கள்.
  • காலை  இளம்  வெயிலில்  அலையாதீகள்.
  • மலம்,  சிறுநீர்  போன்றவற்றை  அடக்கி  வைத்திருக்காதீர்கள்.
  • முதல்  நாள்  சமைத்த  கறி  உணவு,  அமுதம்  போன்று  இருந்தாலும்  அதை  மறுநாள்   உண்ணவேண்டாம்.
  • உலகமே  பரிசாக  கிடைக்கிறது  என்ற  போதும்,  பசிக்காத  போது  உணவு  உட்கொள்ளாதீர்கள்.
  • உணவு  உட்கொள்ளும்போது  தாகம்  அதிகம்  எடுத்தாலும்,  இடைஇடையே  தண்ணீர்   குடிக்கக்கூடாது.
  • மயக்கும்   மனம்   வீசும்  கந்தம்,  மலர்கள்  போன்றவற்றை   நள்ளிரவு    நேரத்தில்    நுகரக்கூடாது  .
  • மாத  விலக்கான  பெண்கள்,     ஆடு, கழுதை  போன்றவை   வரும்  பாதையில்  எழும்   புழுதி  உடல்மேல்   படும்படி  நெருங்கி   நடந்து  செல்லாதீர்கள்.
  • இரவில்,  விளக்கு  வெளிச்சத்தில்   நிற்பவர்   நிழலிலும்,  மர  நிழலிலும்  நிற்பதை  தவிர்த்திடுங்கள்.
  • பசியின்  போது   உணவு   உட்கொண்ட  உடனேயும்   உடலுறவு   வைத்துக்கொள்ளாதீர்கள்.
  • மாலை  நேரத்தில்  தூங்குதல்,  உணவு  உட்கொள்ளுதல்,  அளவுக்கு  மீறிய   காமச்  செயல்களில்  ஈடுபடுதல்,  அழுக்கான  ஆடை   அணிந்திருத்தல்,  தலையை  வாரி  முடி   உதிரச்செய்தல்   போன்ற  செயல்களில்  ஈடுபடாதீர்கள்.
  • மற்றவர்கள்  கை  உதறும்போது  அவர்களது   நகத்திலிருந்து  விழும்  தண்ணீரும்,  குளித்து  தலை  துவட்டும்  போது  உதிரும்  தண்ணீரும்   மேலே  தெரித்து விழும்  இடத்தில்  நடக்காதீர்கள்.
-இப்படி  சொல்கிறார்  அவர்.

தேரையார்   சித்தர்  கூறிய  அனைத்தையும்  ஒரே  நாளில்  பின்பற்றுவது   என்பது  இயலாத  காரியம்.  ஏனென்றால்,  நாம்  இப்போது   வாழ்ந்து  கொண்டிருக்கிற   வாழ்க்கை   அப்படி.  அதனால்,  படிப்படியாக   முயற்சிப்போம்.  நோய்,  நொடியின்றி   நாளும்   நலத்தோடு   வாழ்வோம்.

இப்படிக்கு... தென்றல்  

Wednesday, September 22, 2010

பெண்ணின் கருமுட்டை

ஒரு   பெண்ணின்  அடிவயிற்றின்  உள்ளே   பார்ப்பதற்கு  கருஞ்சிவப்பு   நிறமான  ஒரு  பேரிக்காய்  போல்  மேற்புறத்தில்  பருத்தும்,  கீழ்புறத்தில்  சிறுத்தும் கருப்பை  காணப்படுகிறது.  தசைகளால்  அமைந்த   இந்தபையில்  தான் கண்ணுக்கு தெரியாத  சிறுபுள்ளியாக  இருக்கும்  கரு, முழு  குழந்தையாய்  உருவெடுக்கும்  அதிசயம்    நடக்கிறது.

கர்ப்பப்பையின்   இரண்டு  பக்கமும்  சினைப்பைகள்   பாதாம்  பருப்பு   அளவில்  இருக்கும். ஆணுக்கு  விரைகள்  போல  பெண்ணுக்கு  இந்த சினைப்பைகள். விரைகள்  விந்தணுக்களை  உற்பத்தி  செய்கிறது. சினைப்பைகள் கருமுட்டைகளை உற்பத்தி  செய்கிறது. குழந்தை  பிறப்பதற்கு  மிக  முக்கியமான  கரு  முட்டையை  மாதம்  ஒன்று  என்ற  கணக்கில் முதிர்ச்சியடைய  வைக்கிறது.  இந்த  சினைப்பையில் உள்ள  நாளமில்லா  சுரப்பிகளில்  சுரக்கும்  ஈஸ்ட்ரோஜன்,  புரொஜெஸ்ட்ரான்    போன்ற  ஹார்மோன்கள்  தான்  ஒரு  பெண்ணிடம்  பெண்மையை  ஒளிரச்   செய்கிறது.

 ஒவ்வொரு  பெண்ணும்  பிறக்கும்போதே   கிட்டத்தட்ட  1   லட்சத்திற்கும்     மேற்பட்ட   கருமுட்டைகளோடு  பிறக்கிறாள்.  பெண்  வயதுக்கு  வந்தபின்  மாதம் ஒரு  கருமுட்டை  முதிர்ச்சி  அடைந்து  கருப்பையை  நோக்கி  நகர்கிறது.  முதல்   கருமுட்டை  முதிச்சியடைந்து  வெளிவருவதையே  வயதுக்கு வருதல்    என்று கூறுகிறார்கள்.

ஆணின்  உயிர்   அணுவை  விட  பெண்ணின்  கரு  முட்டை  8   மடங்கு பெரியது.  இந்த  கருமுட்டையில்தான்   23  குரோமோசோம்கள்  உள்ளன.  இந்த   குரோமோசோம்களில்  தான்  அந்த  பெண்ணின்  உயரம்,  முன்கோபம், சமைக்கும் திறன்,  மார்ப  அளவு,  பரம்பரை  நோய்கள்,  பாரம்பரியகுணங்கள் எல்லாமே அடங்கயுள்ளன.  இதைபோல் 23 குரோமோசோமுகளுடன் ஆணின் உயிர் அணுவும், அந்த  ஆணின்  பண்புகளுடன்  இருக்கும்.

லட்ச்சக்கணக்கான  கருமுட்டைகளோடு  ஒரு  பெண்  பிறந்தாலும்,அவள் வாழ்நாளில்  375  கருமுட்டைகள்  மட்டுமே  முதிச்சி  அடைகின்றன.  கண்ணுக்கு  தெரியாத  இந்த கரு  முட்டைகளை   ஒரு  தேக்கரண்டியில்  சுமார்  10   லட்சம்  என்ற  அளவில்  நிரப்பலாம்.  முதிச்சி  அடைந்த   கருமுட்டை  சினைப்பையில்   இருந்து  விடுபட்டு  பெலோப்பியன்  குழாய் வழியாக  கருப்பையை  நோக்கி  நகரும்.  பாதிதூரம் போகும்போதே   ஈரமாக, கதகதப்பாக,  இருட்டாக,  வசதியாக  இருக்கும் பெலோப்பியன் குழாயில்  தங்கி  விடுகிறது.

 ஆணிடம்  இருந்து  வெளிப்பட்டு  கருப்பையின்  வாயிலில்   விடப்பட்ட  30   கோடிக்கும்  மேற்பட்ட உயிர்  அணுக்கள்  ஒரே  குறிக்கோளுடன்  கருமுட்டையை   நோக்கி  கிளம்புகின்றன.  அது  விடுபட்ட  இடத்திற்கும்  கருமுட்டை  இருக்கும்  இடத்திக்கும்   உள்ள  தூரம்  சுமார்  5   அங்குலம்,  விந்தணுவின்  உருவத்தோடு  நம்மை ஒப்பிட்டால்  இது  5   மைல்  தூரம்  எதிர்நீச்சல்  போடுவதற்கு  சமம்,  மிகவும்  கடினமான பாதை.  போகும்  வழியிலேயே  பாதி  உயிரணுக்கள்  காலி,  மீதி  எந்த  குழாயில்  கருமுட்டை  இருக்கிறது  என்று  தெரியாமல்  தனித்தனியாக  பிரிந்து  செல்கிறது,  கடைசியாக  கருமுட்டையை  அடைவதற்குள்  ஆயிரத்துக்கும்  குறைவான  உயிர்  அணுக்களே  இருக்கும்.  இந்த  ஆயிரத்திலும் ஒன்று  தான்  கடைசியில் முட்டையினுள் நுழைகிறது.  3   மணிநேர  பயணத்துக்கு  பின்  இது  நடைபெறுகிறது.  ஒரு  உயிர்  அணு நுழைந்தவுடன்  கரு முட்டை  மற்ற  அணுக்களுக்கு  தடை  போட்டுவிடுகிறது.  கரு  உருவாகிறது.  ஒரு  கருமுட்டை  குழந்தையாக  உருவாகும்  விதம்  இயற்கையின்  விந்தை  என்கின்றனர்  விஞ்ஞானிகள்.

இப்படிக்கு... தென்றல்

Tuesday, September 14, 2010

மாதங்களும் தாக்கும் நோய்களும்

ஜனவரி -  பிப்ரவரி           மாதங்கள்  பனிக்காலம்   என்பதால்   தோல்  பிரச்சனைகள்    ஏற்படும்.   குளிர்  அதிகமாக  இருப்பதால்  போதைப்  பார்ட்டிகளின்  மது  அளவும்  கூடும்,  இதனால்  நெஞ்செரிச்சல்,  தொண்டை வலி, ரத்த  அழுத்தம்  ஆகியவையும்  எட்டிபார்க்கும்.

முன்  எச்சரிக்கை :       நெஞ்சு  எரிச்சல்,  சுவாசத்தடை  ஆகியவை  வந்தால்...அதுவே  தொடர்ந்தால்... அதிகமாக  வலி  எடுத்தால்  அது  இதய  நோயின்  அறிகுறியாக  இருக்கலாம்.  உடனே ரத்த  பரிசோதனை  செய்து  கொள்வது  நல்லது.  உணவில்  உளுந்து,  கோதுமை  அதிகமாக  சேர்த்துக்கொள்ளவும்  அதோடு  பருப்பு, பயிறு,  கீரை  ஆகியவற்றையும்  சேர்த்துக்கொள்வது  நல்லது.  எண்ணெய்  குளியல்  உடல்  வெப்பத்தை  சீராக்கும்.  வெயில்  நம்  உடம்பில்  படுமாறும்  இருப்பது  நல்லது.

தவிர்க்க  வேண்டியவை :     குளிர்ந்த நீர்,  கூழ்  டிரிங்ஸ்,  பிரிஜ்ஜில்  வைத்த  உணவுகள்  ஆகியவற்றைத்  தொடவே  கூடாது.  அதே போல,  குளிர்ந்த  நீரில்  குளிப்பதும்  நல்லதல்ல.

மார்ச் -  ஏப்ரல்            மாதங்களில்  வெய்யிலின்  தாக்கம்  அதிகரிக்கும்.  இதனால் உடலில்  நீர்த்  தன்மை  வற்றிப் போகும்.  நமது  உடலில்  வெப்பத்தின் அளவும்  கூடும்.  வாந்தி,  வயிற்று போக்கு,  ஆஸ்துமா,  இருமல்,  பசியின்மை,  சளித்  தொல்லை,  அலர்ஜி,  தலைவலி  மற்றும்  வைரஸ்  நோய்கள்   நம்மை  தாக்கும்.

முன்  எச்சரிக்கை   :       ஆஸ்துமா  வந்தால்  கவனமாக  இருக்கவும்.  வந்த   தொடக்கத்திலேயே  அதை   கட்டுப்படுத்திவிடவும்.  இல்லாவிட்டால்  காய்ச்சல்  வந்து  நிமோனியாவாக   மாறிவிடும்.  பசியின்மை  ஏற்பட்டால்  சாதரணமாக  எடுத்துக்  கொள்ளாமல்   உடனே   டாக்டரை  அனுகுவது  நல்லது.  கீரை, பழவகை, சார்ந்த  உணவுகளை   அதிகமாக   சாப்பிடவும்.  அடிக்கடி  ஜீரணக்  குறைவு  ஏற்படும்  என்பதால்   சுக்கு, சீரகம்  கலந்த  நீரைக்  குடிக்கப்  பயன்படுத்தவும்.
                      
தவிர்க்க  வேண்டியவை  :   பகல்  தூக்கம்   ஆகவே  ஆகாது.  கொழுப்புள்ள   உணவை   அறவே  தவிர்க்கவும்.  அதுபோல்,  உளுந்து  சேர்த்த  உணவுகளை  சாப்பிட  வேண்டும்.

மே -  ஜூன்            மாதங்கள்  பருவக்காலம்  மாற்றம்  ஏற்படும் சமயம்.  வெயில்  உச்சத்தை  அடையும்.  இதனால்  அம்மை  நோய்,  கண்  தொடர்பான  நோய்கள்,  மஞ்சள்  காமாலை,  வாத  நோய்,  மூட்டு பிரச்சனைகள்  உடல்  சோர்வு   ஏற்படும்.  குழந்தைகள்  மண்ணில்  விளையாடுவதால்  அவர்களுக்கு  தோல்  சம்மந்தப்பட்ட  நோய்கள்  வரும்.

முன்  எச்சரிக்கை  :      அம்மை நோய்  மற்றும்  கண்   தொடர்பான   நோய்கள்  சீக்கிரமாகவே   அடுத்தவருக்கும்   பரவும்  என்பதால்  மிகவும்  கவனமாக   இருப்பது  நல்லது.  நமது  உடலை  சுத்தமாகவும், சுகாதாரமாகவும்   வைத்திருக்க  வேண்டும்.  பழங்களை  சாப்பிடும்  போது  சுத்தமான  நீரில்  நன்றாக  கழுவிய   பிறகு   சாப்பிடவும்.  இனிப்பான  உணவு,  பயறு,  உளுந்து,  காய்கறிகளை   அதிகமாக   சாப்பிடவும்.

தவிர்க்க வேண்டியவை  :   கடினமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டாம்.  வெயில்  உடம்பில்,  தலையில்  படாமல்  இருப்பது  நல்லது.

ஜூலை - ஆகஸ்ட்           மாதங்கள்  சிக்கன்  கோனிய போன்ற  நோய்கள் வரும்  காலம்.  கண் நோய்,  பசியின்மை,  அலர்ஜி  ஆகிய  பிரச்சனைகளும்  ஏற்படும்.
               
முன்  எச்சரிக்கை  :            காய்ச்சல்,  கண்  நோய்  போன்ற  தொற்று  வியாதிகளின்    அறிகுறிகள்   தெரிந்தவுடன்  டாக்டரை  அனுகவும்.  அரிசி,  கோதுமை,  பயறு,  உளுந்து,  பச்சை  பட்டானி,  மசாலா  சேர்த்த  உணவுகளை  சாப்பிடலாம்.  குறிப்பாக  பயறு  கஞ்சி  நல்லது.

தவிர்க்க   வேண்டியவை :          மதிய  தூக்கம்   கூடாது.  அதிக  சூடான   உணவுகளை   சாப்பிட  வேண்டாம்.  வெயிலில்  அலையக்  கூடாது.  கொசு   கடிக்காமல்   கவனமாக  இருக்கவும்.  அலர்ஜி  உணவுகளை  தவிர்க்கவும்.  சுற்றுப்புறத்தை  சுத்தமாக  வைத்துக்கொள்வது   நல்லது.

செப்டம்பர் -  அக்டோபர்             மாதங்கள்   மழைக்காலம்   என்பதால்   ஜலதோசம்,  வயிற்று  நோய்கள்,  தலைவலி,  ஒற்றைத்  தலைவலி,  இதய நோய்,  வாத நோய்,  நெஞ்சு  எரிச்சல்,  பித்தம்  தொடர்பான  நோய்கள்,  கண் நோய்  ஆகியவை  தாக்கும்.

முன்  எச்சரிக்கை  :      இதயத்தில்   ஏதாவது  பிரச்சனை  என்றால்  உடனடியாக   டாக்டரிடம்  செல்லவேண்டும்.  டாக்டர்  ஆலோசனைப்படி  தேவையான   மருந்து,  மாத்திரைகளை   சாப்பிடவும்.  கண்களில்,  காதுகளில்  ஏதாவது  பிரச்சனைகள்  என்றாலும்  கவனமாக  இருக்கவும்.  பால்,  பால்வகை  பொருட்கள்,  முட்டை,  மீன்,  மாமிசம்   ஆகிய  உணவுகளை  சாப்பிடலாம்.

தவிர்க்க  வேண்டியவை  :      குளிர்ந்த  உணவு,  பகல்  தூக்கம்,  வெயிலில்  அலைவது  கூடவே  கூடாது.  அதே போல்  பெண்கள்  இந்த  காலங்களில்  விரதம்  இருப்பதை  தவிர்ப்பது  நல்லது.

நவம்பர் -   டிசம்பர்         மாதங்களில் மழையும்  பனியும்   சேர்ந்த  காலம்   என்பதால்  சுவாசத்தடை,  தும்மல்,  வயிற்றுக்  கோளாறு,  தோல்  நோய்  மற்றும்   குழந்தைகளுக்கு  பிரச்சனைகள்   ஆகியவை  ஏற்படும்.  குளிர்காலம்  என்பதால்  அதிகமாக  மது  குடிப்பவர்களுக்கு  அது  தொடர்பான  நோய்கள்  தாக்கும்.

முன்  எச்சரிக்கை :  ரத்த அழுத்தத்தை  கட்டுப்பாட்டோடு வைத்திருப்பது   நல்லது.  மது குடிப்பதை  தவிர்க்கவும்.  எண்ணெய்  உணவுகளை  ஓர்  அளவு  சாப்பிடலாம்.  எண்ணெய்  குளியல்  நல்லது.  உடலில்  வியர்வை  சொட்டும்  அளவிற்கு  உடற்பயற்சி  அவசியம்.  கெட்டியான  உணவுகளை  சாப்பிடவும்.  உடம்பில்  வெயில்  படுவது  நல்லது. 

தவிக்க   வேண்டியவை :   குளிர்ந்த  நீர்  மற்றும்  கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம்   ஆகியவற்றை  தவிர்க்கவும்.  இரவில்  குளிக்கக்  கூடாது.  பிரிட்ஜ்  உணவுகளை  தவிக்கவும்.   

இப்படிக்கு... தென்றல்  

Saturday, September 11, 2010

குழந்தைகளுக்கான உணவுகள்

வளரும்   குழந்தைகளுக்கு   உரிய  உணவு  என்ன  என்பது  குறித்து  நாம்  ஒரு    தெளிவான முடிவுக்கு   வர முடியாது !  ஏனென்றால்  அவர்களுடைய   வயது  மற்றும் வளர்ச்சிக்கு  தகுந்த   ஆரோக்கியமான  உணவுகளை   தேர்ந்தெடுத்து,  அவர்கள்  விரும்பி  சாப்பிடும்  வண்ணம்  சமைத்து  கொடுப்பதே  ஒரு  தனிக்கலை  என்று  சொல்லலாம். குறிப்பாக,  பாஸ்ட் புட் கலாசாரத்தை,  அவர்களிடம் உருவாகமல்  கவனிப்பது நல்லது.  மேலும்,  தினமும்  அவர்களுக்கு  2  கப்  பால்,  5 பாதாம்பருப்பு, 4 பேரிச்சம்பழம், 10  வேர்க்கடலை  ஆகியவை   சாப்பிடக்கொடுக்க  வேண்டும். இதை  எல்லாம்  கணக்கில் கொண்டு,  உங்கள்  வீட்டு செல்லக்குழந்தைகளுக்காகவே  ஒரு  ஆரோக்கிய  உணவுப்  பட்டியல்  இதோ....


காலை
1 .           காய்கறிகளால் உருவான  ஆம்லேட்
2 .           வேகவைத்த   முட்டை
இவற்றில்  ஏதாவது ஒரு  அயிட்டத்தோடு  2  இட்லி  அல்லது   2   தோசை
3 .           காய்கறி  சேமியா உப்புமாவுடன்   ஒரு  டம்ளர்  பால்.


மதிய  உணவு
1 .           இரண்டு  உருளைக்கிழங்கு  சேர்த்த  பரோட்டா
2 .           கேரட்,  வெள்ளரிக்காய்,  முந்திரிப்பருப்பு,  திராட்சைப்பழம்  கலந்த  தயிர்ச்சாதம்
3 .           வெஜ்  புலாவ்
4 .           பூரியுடன்  கடலைக்  கூட்டு
5 .           சப்பாத்தி  மற்றும்  வெஜ்  குருமா
6 .           சாதம்  மற்றும்  காய்கறிக்  கூட்டு
 இதில்  ஏதாவது  ஒரு  வகையை  செய்து   கொடுக்கலாம்.  அசைவ  உணவு  சாப்பிடுவோராக  இருந்தால்  ஒரு துண்டு மீன்  அல்லது  கறி  அல்லது  சிக்கன்  கொடுக்கலாம்.

மாலை
1 .         வெஜ்  கட்லட்
2 .         தயிர்  வடை
3 .         வெஜ்  ரோல்
4 .         உருளைக்கிழங்கு  போண்டா
5 .         வெஜ்  சாண்ட்விச்
இதில்  ஏதாவது  ஒரு  ஆயிட்டத்துடன்  ஒரு  கப்  தக்காளி  சூப்.

இரவு
1 .       சப்பாத்தி,  பருப்புக்கூட்டு  மற்றும்  ஒரு கப் தயிர்.
2 .       காய்கறி,  பரோட்டா  மற்றும்  ஒரு  கப் தயிர்.
3 .       காய்கறியுடன்  கூடிய  ரவை  உப்புமா  மற்றும்  ஒரு  கப்  தயிர்.
4 .       காய்கறி  சேர்த்த  தோசை  மற்றும்  ஒரு  கப் தயிர்.
5 .       காய்கறி  கலந்த  நூடுல்ஸ்  மற்றும்  ஒரு  கப்  தயிர்.

இவற்றில்  ஏதாவது  ஒரு  அயிட்டம்  செய்து  கொடுக்கலாம்  மேற்கண்ட  பட்டியல் பிரகாரம்   தினமும்  உங்கள்  மழலைச்  செல்வங்களுக்கு  கொடுத்து  வந்தால்,  அவர்கள்  ஆரோக்கியமாக  வளருவார்கள் என்பதில்  எள்ளளவும் சந்தேகமில்லை.

இப்படிக்கு...தென்றல்

Monday, September 6, 2010

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்...

எப்போதும்  இளமையாக  இருக்க  உணவு  விஷயத்தில் உக்களுக்கு  உதவும்  21  குறிப்புகள்  இங்கே ......

  • தினசரி  ஒரு  கைப்பிடியளவுக்கு  பாதாம் பருப்பு,  வேர்க்கடலை  போன்ற  கொட்டை   வகைகளைச்  சாப்பிடுங்கள்.  இதை  சாப்பிட்டால்  இதய நோய்  அபாயம்  வெகுவாக  குறையும்.   ஆயுளில்  3   ஆண்டுகளை  அதிகரிக்கும்  என்கிறார்கள்  அமெரிக்க  ஆராய்ச்சியாளர்கள்,  இதயத்துக்கு  ஆரோக்கியமளிக்கும்   நல்ல  கொழுப்பு,  ஒட்டுமொத்த   நலனை  காக்கும்  'செலினியம்'  ஆகியவை  கொட்டை வகை  உணவுகளின்  சொத்து.
  • உங்கள்  உணவில்  வாரத்தில்  2   முறை  மீன்  இருக்கட்டும்.  இரண்டில்  ஒன்று  எண்ணெய்  மீனாக  இருந்தால்  நல்லது.  கொலஸ்ட்ராலை  குறைத்து,  இருதய  நோய்  அபாயத்தைக்  கட்டுப்படுத்தக்கூடிய  'ஒமேகா  3  பேட்டி  ஆசிட்',   எண்ணை  செறிந்த  மீன்களில்  அதிகம்  உள்ளது.
  • சாப்பாடுகளுக்கு இடையே  3   மணிநேர  இடைவெளி  அவசியம்.  மூன்று  பிரதான  உணவுகளில்  காலை  உணவை  முழுமையாக  சாப்பிடுங்கள்.
  • தினசரி  4   கப்  காபி  பருகலாம்.  ஆரோக்கியம்  காக்கிறேன்  பேர்வழியென்று  காபியையே  துறக்க  வேண்டாம்.  அளவாக  காப்பி  பருகுவது  என்பது  சர்க்கரை  நோய்,  உணவுக்குழாய்  கேன்சர்,  ஈரல்  நோயிகளைத்  தடுக்கும்  என்பது  ஆய்வாளர்களின்  கருத்து.
  • தினந்தோறும்  5   வகை  பழங்கள்,  காய்கறிகள்  சாப்பிடுவது  ஆரோக்கிய  வாழ்வுக்கு  அடித்தளமிடும்.  பழங்கள்,  காய்கறிகளில்  உள்ள   'ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்'   கேன்சர்,  இருதய   நோயிகளைத்  தடுக்கும், நோயித் தொற்றுக்கு  எதிராக   இருக்கும்.  முன்றுக்கு  இரண்டு  என்ற  விகிதத்தில்  காய்கறி,  பழங்கள்  எடுத்துக்  கொள்ளலாம்.  காய்கறிகள் அதிகமான  நார்ச்சத்தையும்,  குறைவான சர்க்கரை  சத்தையும்  கொண்டுள்ளன.
  • வயதுக்கு  வந்தவர்கள்  தினமும்  6   கிராமுக்கு  மேல்  உப்பு  சேர்க்க  வேண்டாம்.  சமையல்  செய்யும்போது  மட்டும்  உப்பு  சேர்க்கவேண்டும்.  பிரெட்,  பாக்கிங்  உணவு  வகைகளில்  அதிக  உப்பு  மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.
  • மொத்தம்  7   வகையான  நிறங்களை  கொண்ட  காய்கறிகள்,  பழங்கள்  இருக்கின்றன.  ஒவ்வொரு  வண்ண  காய்கறி,  பழங்களும்  வெவ்வேறு  வகையான  'ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை'  கொண்டிருக்கிறன.  எனவே  எல்லா  வண்ண  காய்கறி,  பழங்களும்  உங்கள் உணவில்  இருக்கட்டும். 
  • தினமும்  8  கப்  திரவம்  குடிப்பது   அவசியம்.  ஆனால் அது  எல்லாம்   தண்ணீராக  இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.   டீ,  காபியும்  இதில்  இடம்பெறலாம்.
  • சராசரியாக  பெண்கள்  9 வகை  மாவுசத்து  உணவுகளை  (ஆண்களுக்கு  11  வகை)  சாப்பிடவேண்டும்.  ஒரு  துண்டு ரொட்டி,  முட்டை  அளவு  உருளைக்  கிழங்கு,  28  கிராம்  சாதம்  போன்றவை  இதில்  அடங்கியிருக்கலாம்.
  • சாதரணமாக  குளிபானங்களில் 10  சதவீத  சர்க்கரை  உள்ளது.  அதாவது  ஒரு   புட்டியில்  150  கலோரி  இருக்கிறது.  தொடர்ந்து   குளிர்பானம்  பருகுவது   தொப்பைக்கு  ஒரு  முக்கிய  காரணம். 'டயட் '   குளிர்பானங்களுக்கு  மாறலாம்.  ஜூஸுடன்  அதிக தண்ணீர்  சேர்த்துப்   பருகலாம்.
  • காலை  உணவும்,  மதிய  உணவும்  11  மணியை  தாண்ட வேண்டாம்.  அதிகப்  பசியின்  போது  நீங்கள்  அதிகமாக   சாப்பிடுவீர்கள்.
  • பொதுவாக   பெண்கள்  உணவில்  12   மில்லி   கிராம்     இரும்புச் சத்தை  எடுத்துக்கொள்கிறார்கள்.  இரும்புச்சத்து  செறிந்த  உணவுகளை  உங்கள்  உணவில் தினசரி  சேர்த்துக்  கொள்ளுங்கள்.
  • சாதாரணமாக   நாம்  நம்  ஒவ்வொரு  கிலோ  எடைக்கும்  26   கலோரி   உணவு  சாப்பிடலாம்.
  • பனை அல்லது தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் சுத்தமான பதநீர், கள் போன்றவற்றை  தினமும் ஒரு கோப்பை அருந்தலாம். 
  • நீங்கள்  ஒருமுறை  உணவை  விழுங்கும்போது  15  முறை  மெல்ல  வேண்டும். நாம்  சராசரியாக  7   முறைதான் உணவை  மேல்கிறோம்.
  • அங்களுக்கு  தினசரி  16   சதவீதபுரதம்  அவசியம்.  அதாவது  55  கிராம். பெண்களுக்கு  என்றால்  45  கிராம்.
  • நாம்  அனைத்து  விதமான சத்துக்களையும்  பெற,  ஒவ்வொரு  3  நாட்களுக்கும்  17   வகையான உணவு வகைகளை  உண்ண  வேண்டும் என்கின்றனர்  உணவியல்  நிபுணர்கள்.
  • அனைவருக்கும்  தினசரி  18   கிராம் நார்சத்து  தேவை.  அதற்கு தானியங்கள்,  பழங்கள்,  காய்கறிகள்  ஆகிறவை  நல்ல  ஆதாரங்கள்.
  • மொத்தம்  19   வகையான  தாது  உப்புகள்,  வைட்டமின்கள்  அனைவருக்கும்   அவசியத்  தேவை  என்பது  மருத்துவர்களின்  கருத்து.
  • உங்கள்  தினசரி  உணவில்,  கொழுப்பு  20  கிராம்களுக்கு  அதிகமாக இருக்கக்கூடாது.  உங்கள்  தினசரி  கலோரிகளில்   35   சதவீதத்துக்குள்   தான்  கொழுப்பின்   பங்கு  இருக்க  வேண்டும்.
  • பால்  சார்ந்த  உணவு  வகைகளில்  21,  ஒவ்வொரு  வாரமும்  உங்கள்  உணவுப்  பட்டியலில்  இருப்பது  கட்டாயம்.  தினசரி  மூன்று  வகையான  பால்சார்ந்த  உணவுப்  பொருட்களை  சாப்பிடுங்கள்.
இப்படிக்கு... தென்றல்

Sunday, September 5, 2010

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவு முறை

முருந்து மாத்திரைகளை விட உணவு  முறைகளே சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. பாகற்காய், சோற்றுக்கற்றாழை  முதலியவற்றின்  மருத்துவ  குணங்களை  இந்த  கட்டுரையில் காணலாம்.

சர்க்கரை   நோய்    :    சர்க்கரை நோய்  மாத்திரை  சாப்பிடாமல் கட்டுப்படுத்தும் நிலை உள்ளது.   அதற்கு  சில  பழங்களையும், காய்கறிகளையும், மூலிகைகளையும்  சாப்பிட்டால்  ரத்தத்தில்  உள்ள  சர்க்கரையின்  அளவை  குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

பெரும்பாலும்  கசப்பு  தன்மை  உள்ள  பாகற்காய்,  கோவைக்காய் ,  சோற்றுக்கற்றாழை,  நாவல் பழக்கொட்டை,  வெந்தயம்,  மஞ்சள்  முதலியவை ரத்தத்தில்  உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்  தன்மை கொண்டவை.  ஆனால்  அதே  நேரத்தில்   கூடுதலாக  உள்ள சர்க்கரையின் அளவை மட்டுமே  குறைக்கும்.

பாகற்காய்  :
பாகற்காயில்  3   வகை  உண்டு.  பந்தலில்  தொங்கக்கூடிய  பெரிய  பாகற்காய் கொம்பை பாகற்காய்,  தரையில்  படர்ந்த நிலையில்  காய்க்கும்   மீதி  பாகற்காய்.  கொடியில் கிடைக்கும்  வீரிய  ரக  பாகற்காய்  ஆகியவை  உள்ளன.          இந்த 3  வகை   பாகற்காய்களுமே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கக்  கூடியவை   ஆகும். பாகற்காயை  பொரியல் செய்து  சாப்பிடலாம்.  தக்காளியுடன்  சேர்த்து  சமைத்தல்  கசப்பு  தன்மை குறையும்.
                       
அதேபோல,  முட்டை வெள்ளைக்கரு  அல்லது  பருப்பும்  சேர்த்தும்  சமைக்கலாம்.  பாகற்காய்   நல்ல  நார்ச்சத்து  கொண்டதும்  ஆகும்.  மேலும்,  பச்சைப் பாகற்காயை  அரிந்து  உப்பு  போட்டுக்  காயவைத்து  வற்றல்  ஆக்கி  பொறித்தும் சாப்பிடலாம். அது  தவிர,  பாகற்காயை விருப்பும் அளவுக்கு சாப்பிடலாம்.

கோவைக்காய் :
இதைபோலத்தான்,  கோவைக்காயையும் சமைத்தும் சாப்பிடலாம். அதாவது  காடுகளில்  கிடைக்ககூடிய  கோவக்காய் கசப்பாக  இருக்கும்.  ஆனால் தற்போது  கடைகளில்  கிடைக்கக்கூடிய  புதிய  ரகக் கோவைக்காய் கசப்பு இல்லாமல் வெள்ளரிக்காய் போல உள்ளது.  அதை  சமைத்து சாப்பிடலாம். இதுவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக்  கட்டுப்படுத்தக்கூடிய   நல்ல   நார்ச்சத்துள்ள  காய் ஆகும்.

சோற்றுக்கற்றாழை :
சோற்றுக்கற்றாழை  கிராமப்புறங்களில்  எளிதில்  கிடைக்கக்கூடியது. கிராமப்புறத்தில்  உள்ளவர்கள்  சோற்றுக்கற்றாழையின்  மேல்தேலை  நீக்கி  உள்ளே உள்ள  அல்வா  போன்ற சதைப்பற்றை  எடுத்து நான்கைந்து  முறை  கழுவி  மருந்து போல் தினமும்  ஒரு  நெல்லிக்காய்  அளவு  சாப்பிடலாம். இது  கசப்பாக இருக்கும்.  இதில்  சிறிது மஞ்சள்  தூள் கலந்து  சாப்பிட்டால் மிக  நல்லது.  மோரை  கலந்தும்  சாப்பிடலாம்.  இப்படி  சாப்பிட்டால் கசப்பு  தன்மை  எளிதில் குறையும்.    இதை சாப்பிடுவதால்  சர்க்கரை  நோயும்  மிகவும்  கட்டுப்படும்.  தலைமுடி   உதிர்தலும்  நிற்கும்,  முடியும்  வளரும்.  நகர்புறத்தில் உள்ளவர்கள்  தொட்டிகளில்  வளர்க்கலாம். எளிதில்  வளரக்கூடியது.  பறித்த  சோற்றுக் கற்றாழையும்  நீண்ட  நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க  முடியும். இது  வயிற்றுப்புண்ணுக்கும்  மாமருந்தாக  உள்ளது.

வெந்தையம் :
வெந்தையம் எளிதில் கிடைக்ககூடியது.  வெந்தயத்தை   தண்ணீரில்  கழுவி,  வெயிலில்  காயவைத்து,  ஒரு  ஸ்பூன்  தினமும் மோர் அல்லது தண்ணீரில்  கலந்து குடிக்கலாம். அல்லது  வெந்தையத்தை  தண்ணீரில்  8  மணிநேரம்  ஊறவைத்து வாயில்  மென்று  சாப்பிடலாம்.  அதிக  அளவு  கசக்காது.  இதை  அதிகாலையில்  வெறும்  வயிற்றில் சாப்பிட்டால்  நல்ல  பலன்  கிடைக்கும்.  அல்லது  வெந்தையத்தை  முளைகட்டி  உலர   வைத்து பொடியாக்கி  சாப்பிடலாம்.  இது  எவ்வளவு  சாப்பிட்டாலும் நல்லதுதான்.  பாதிப்பு  இல்லை . சளிப்பிடிக்கும்  தன்மையுள்ளவர்கள்  ஊற  வைத்து  சாப்பிடக்கூடாது.  தினமும்  குழப்பு  தாளிக்கும்  போது  வெந்தயத்தை  பயன்படுத்தினால்  நல்ல பலன்  கிடைக்கும்.  வெந்தயக்கீரை  உருவாக்கி  அதை   பொறியலாக்கி  சாப்பிடலாம் வெந்தயம்  சாப்பிட்டால்  ரத்தத்தில்  உள்ள  சர்க்கரை  அளவு  நன்றாக  குறையும். குடல்புண்  ஆறும்.  வாய்புண்  ஆறும்.  ஊறவைத்த  வெந்தயத்தை  அரைத்து  அதில்  புழுங்கல்  அரிசி  மாவு  கலந்து  அதை  களியாக  செய்து  சாப்பிடலாம்.

நாவல்பழம் - கொட்டை : 
நாவல்பழம்  நாவல்  கொட்டை ஆகிய  இரண்டும்  நீரழிவை  கட்டுப்படுத்தும்  ஒரு மருந்தாக  பயன்படுகிறது. நாவல்பழம்  கிடைக்கும்  சிசன்களில் சாப்பிடவேண்டும்.  சாப்பிடும்  போது  பழம் மட்டுமல்லாமல்   அதன்  கொட்டையையும் மென்று  சாப்பிடலாம்.  சீசன்  அல்லாத  நேரங்களில்  நாவல்  பழக்கொட்டை  பொடியை கடைகளில்  வாங்கி  தினமும்  மோரில்  கலந்து  சாப்பிடவேண்டும்.

பூண்டு  :
நாட்டுப்பூண்டு,  மலைப்பூண்டு  ஆகியவை  உள்ளன.  இதில்  நாட்டுப்பூண்டு மிக  மருத்துவகுணம்  கொண்டது .குறிப்பாக  ரத்தத்தில்  சர்க்கரை  அளவை குறைகிறது. அன்றாடம் குழம்பில்  பூண்டு  சேர்க்கலாம். வாரம்  ஒருமுறை  பூண்டுக்குழம்பு  வைத்து சாப்பிடலாம். துவையல், ரசம்  ஆகியவற்றிலும்  சேர்க்கலாம். காலையில்  தினமும்  பச்சையாக  2   பூண்டு  பல் சாப்பிடலாம்.  குடல்  புண்  உள்ளவர்கள்  பச்சையாக  சாப்பிடக்கூடாது.

வேப்பிலை :
வேப்பிலை  எங்கும்  கிடைக்கும்  நிலை  உள்ளது. தினமும்  அல்லது  வாரத்திற்கு  5   நாட்கள்  வேப்பிலையை  2   கை  அளவு  பறித்து  அதை  நன்றாக  கழுவி  பிறகு  400   மில்லி  தண்ணீர்  விட்டு  அவித்து  அதை  100  மில்லியாக  வந்த  பிறகு  அந்த   கசாயத்தை  ஆற  வைத்து  குடிக்கலாம்.  வேப்பிலையை  கரைத்தும்  குடிக்கலாம். ஆனால்  மிகவும்  கசக்கும். வெறும்  வயிற்றில்  குடிக்கக்கூடாது. பச்சையாக  வேப்பிலை கிடைக்காதவர்கள்  வேப்பிலையை காயவைத்து  அதை  பொடியாக்கி  தினமும்  ஒரு  ஸ்பூன்  எடுத்து  மோரில்  கலந்தும் குடிக்கலாம். அல்லது  வேப்பம்பூவை    பொறியலாக சமைத்து சாப்பிடலாம்.  ரத்தத்தில் உள்ள சர்க்கரை  அளவை  அதிக  அளவில்   குறைக்கும்  தன்மை கொண்டது .  அது   மட்டும்  அல்ல  குடலில்  உள்ள  பூச்சிகளும் அழித்து  விடும்.  வேப்பிலை  பவுடர்   நாட்டு மருந்து  கடைகளில்  கிடைக்கிறது. தாம்பத்திய  உறவு  கொள்ளக்கூடிய  வயதில்  உள்ள  ஆண்கள்  வேப்பிலை  அதிகம்   சேர்த்தால்  வீரியம்   குறையும்  என்று  கூறப்படுகிறது.

மஞ்சள்   தூள் : 
மஞ்சள்  தூள்  அன்றாடம்  குழம்பில்  சேர்க்கப்படுகிறது.  சர்க்கரை  நோயாளிகள்   மஞ்சள்  தூளை  அதிக அளவில்  குழம்பில்  சேர்க்கலாம்.  அதனால்  ரத்தத்தில்  உள்ள  சர்க்கரை  அளவு  குறைவதுடன்  சளிப்பிடிக்கும்  தன்மையும்  குறையும்.  நோய்  எதிர்ப்பு  சக்தியும்  உருவாகும்.  மேற்கண்டவற்றில்  பாகற்காய், வேப்பிலை, சோற்றுக் கற்றாழை,  வெந்தயம்   ஆகியவை  சர்க்கரை  நோயை  அதிக  அளவில்  கட்டுப்படுத்தும்   தன்மை கொண்டவை.  மேற்கண்டவற்றில்  எதவாது இரண்டை  சாப்பிட்டு  சர்க்கரை  நோயை  கட்டுப்பாட்டுக்குள்  வைத்து  நலமுடன்   வாழலாம்.

அது  மட்டுமல்ல   முருங்கைக்காய்,  பார்லி,  கோதுமை,  பச்சைப்பயறு,  பீன்ஸ், வெள்ளரிக்காய்,  நெல்லிக்காய்,  ஏலக்காய்,  இஞ்சி  ஆகியவற்றை  சாப்பிட்டால்  கல்லீரல்  மற்றும்  கணையம்  ஆகியவற்றை  நல்லப்படியாக  செயல்பட  வைக்கிறது. அதனால்  சர்க்கரை     அளவு    குறைகிறது   என்று    சித்த  மருத்துவர்கள்    தெரிவிக்கின்றார்கள்.

இவை   அனைத்தும்  அன்றாடம்  நம்  உணவில்  பயன்படுத்தக்கூடிய   ஆகும்.  எனவே  இவற்றை  அன்றாட  உணவில்  பயன்படுத்தி  சர்க்கரை  நோயை  கட்டுபடுத்தி  மாத்திரை  மருத்து இல்லாமல் நலமுடன்  வாழலாம்.

இப்படிக்கு... தென்றல்

Friday, September 3, 2010

வாழைப்பழம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும்?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா?  பெண்ணா?  என்பதை நிர்ணயிப்பது பெண்கள் சாப்பிடும் சாப்பட்டில்தான் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள்   நடத்திய ஆராய்ச்சி மருத்துவ பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது.    அதில் மேற்கத்திய நாடுகளில் சமீப காலமாக அதிக அளவில் பெண் குழந்தைகள் பிறந்து  இருப்பதற்கும்  ஆண் குழந்தைகள் பிறப்பது குறைந்து  போனதற்கும்   பெண்கள்  கொழுப்பு குறைவான உணவை சாப்பிடுவதும்,  காலை உணவை தவிர்ப்பதும் தான் காரணம் என்று குறிப்பிட்டு உள்ளது.

பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்  சி, இ,  மற்றும் பி.12  ஆகியவை  அதிகம்  உள்ள உணவை பெண்கள் சாப்பிட்டால் ஆண் குழந்தை    பிறக்கும்        என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள்.  பெண்கள்  செரியல் ( அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்களாலான உணவு )  அதிகமாக சாப்பிட வேண்டும். வாழைப்பழம்  அதிகமாக    சாப்பிடவேண்டும்.  உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்     400    கலோரி   சத்து   உள்ள   உணவை    தினமும் சாப்பிடவேண்டும். இப்படி சாப்பிட்டால்  ஆண்குழந்தை பிறக்கும் என்று அந்த ஆராய்ச்சியாளர்கள்   தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் பியானோ  மார்யூஸ் தலைமையிலான குழுவினர்    இந்த   ஆராய்ச்சியை      நடத்தினார்கள்.

செவ்வாழையில் குழந்தை ரகசியம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு     வந்தால்            அஜீரணக் கோளாறு வராது.  மலச்சிக்கல், மூலநோயால்  பாதிக்கப்பட்டவர்கள் தினமும்   ஒரு  வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய் பாதிப்பிலிருந்து படிபடியாக விடுபடலாம்.  

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு  செவ்வாழைப் பழம் வீதம் 21  நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சரியாகும். குறைவான உயிரணுக்களின் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

இப்படிக்கு... தென்றல்

Tuesday, August 31, 2010

உள்ளூர் வயாக்ரா

இன்று உலகெங்கும் மருந்துக்கடைகளில் அதிகமாக விற்பனையாகும் ஒரு பொருள் "வயாக்ரா" என்றால் மிகையாகாது. இதில் எந்த அளவு நன்மை உள்ளதோ அந்த அளவு எதிர்மறை பலன்களும் உள்ளடங்கி இருக்கின்றன. நம் ஊரிலியே எளிதில் கிடைக்கும், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் "மேற்படி" விசயத்திற்கு ஏற்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ? சில வருடங்களுக்கு முன் "தினத்தந்தியில்" வெளிவந்த மருத்துவ செய்திக் குறிப்பு வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் தினசரி சாப்பிடும் சாதரண சமையலுக்கு பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.

பெருங்காயம் : ஆண்மைக்குறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனிய விறுவிறுப்புட்டும், உணர்ச்சிப்பெருக்கு ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் 'பெரும் காயம் ' பெருங்காயத்தால் ஆறிவிடும்.

ஏலக்காய் : ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மிளகு : மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகுக்கு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும். தாம்பத்யத்துக்கு முன்பு நான்கைந்து மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கம் : லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறிந்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். 1642 -ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லாவக்கத்தைப் பற்றி எழுத்யிருந்தார்.

பூண்டு : பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டதை எளிதில் ஜிரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜிரணமான பின்னரே, அதாவது சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தப் பணியை பூண்டு செய்வதால் பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி : இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டை இலக்கியங்களில் இஞ்சி சாறுடன், தேன் மற்றும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையைக் கலந்து சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்பட முடியும் என்று எழுதப்பட்டுள்ளதே அதற்கு சான்று.

சாதிக்காய் : சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தாம்பத்ய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.

ஓமம் : உணர்ச்சியை தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதன் விதைகளில் 'தைமால்' என்னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புளியங்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை ( ஓம விதைக்கு சம அளவில் ) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்துடன் கலக்கி, நெய், வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கலவையை, பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய உறவுக்கு முன் சாப்பிடலாம்.

வெங்காயம், முருங்கை, பாதாம்......
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், திண்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கயுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையை பெருக்கும் 'பென்-ஆயில்' உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.

பாதாம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்மை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் "அமுக்காரா கிழங்கை" செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.

இது எல்லாம் ஏன். கடையில் 25 காசுக்குக் கிடைக்கும் கடலை உருண்டைக்கு கூட ஆண்மையப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்சனைகள் பறந்தோடிவிடும் என்று விஷயம் அறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இப்படிக்கு... தென்றல்

மனித குரோமோசோம்கள்

மனிதனுக்கு மட்டும்தான் 23   ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. மனிதனின் மூதாதையர்கள் என்று போற்றப்படும் சிம்பன்சி குரங்குகளுக்கு 24  ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. அவற்றை போலவே கொரில்லா, உராங் உட்டாங் குரங்கு வகைகளுக்கும் 24   ஜோடி தான் உள்ளது.


மனிதனுக்கு ஒரு ஜோடி குரோமோசோம்கள் குறைகிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 23  குரோமோசோம்களில்  இரண்டாவது ஜோடி  குரோமோசோம்  மட்டும், மற்ற எல்லாவற்றையும்  விட பெரிதாக இருக்கும். ஏப் என்ற மனித குரங்குகளின் இரண்டு ஜோடி குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி  விட்டதன் விளைவுதான்  இந்த ஆறறிவு மனிதன்.

மனிதன் ஒரு உன்னத படைப்பு என்பது கொஞ்சம் உண்மைதான். ஏனென்றால் மனித மூளையால் மட்டுமே பிரபஞ்சத்தின்  ஆரம்ப தோற்றத்தைப் பற்றி சிந்திக்க முடிகிறது. இந்த அறிவு  வேறெந்த  ஜீவராசிகளுக்கும்  ஒரு போதும் கிடையாது. உன்னத படைப்பு  என்பது மனித மூளை  தானா ...? என்றால் இல்லை.

அது ஒரு தனித் தன்மை. அந்த தனித்தன்மை என்பது பரிணாம   வளர்ச்சிதத்துவத்திற்கு  மிக முக்கியம். ஒவ்வொரு உயிரினமும் ஏதாவது ஒரு தனித்தன்மையைக் கொண்டிருக்கும். மனிதனின் தனித்தன்மை சிந்திப்பது. ஏப் வகை குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான். அந்த வகை குரங்கில் இருந்து மனிதனாக உருமாற சுமார் 1.5  கோடி  வருடங்கள் ஆனது. ஒரு குரங்குக்கும்  மனிதனுக்கும்  வேறுபாடுகள் அதிகம் இல்லை.  24  குரோமோசோம்கள், 23 ஆன பின்புதான், மனிதனுக்கு தனி வடிவம் கிடைத்தது. அதன் உடம்பில் ஏகப்பட்ட ரோமங்கள், தலை வேறு வடிவமாக இருக்கிறது. கை கால்களெல்லாம் நீளம். ஆனால் அடிப்படை அமைப்பில் அதற்கும் மனிதனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 32  பற்கள், இரண்டு கண்கள், கை, கால்களில் 5  விரல்கள், கல்லிரல், ஈரமற்ற சருமம் முதுகெலுப்பு  எல்லாம் ஒரே மாதிரிதான். சிம்பன்சி குரங்கின் மூளையில் உள்ள எல்லா ரசாயன பொருட்களும் மனித மூளையிலும் உண்டு. ஜீரண அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த ஓட்ட அமைப்பு, சுரப்பிகள் எல்லாம் ஒன்று தான்.

மத்திய ஆப்பிரிக்காவில் மனிதனும், குரங்கும் 3   லட்சம் வருடங்களுக்கு  முன்பு ஒரு மூதாதையில் இருந்து பிரிந்து, மனிதனானது. மீண்டும் குரங்காக மாறும்வாய்பெல்லாம் மனிதனுக்கு இல்லை. இந்த 3  லட்சம் வருடங்கள் என்பது மனித பரிணாம காலத்தில் ஒரு சில மணித்துளிகள் தான். ஒரு குரோமோசோம் வித்தியாசமே இத்தனை மாறுதல் என்றால், நான்கைந்து குரோமோசோம்கள்  வித்தியாசப் பட்டிருந்தால்.....ஒரு வேளை மனிதனுக்கு இரண்டு இதயமும்,  நெற்றியில்  ஒரு கண்ணும் வந்திருக்குமோ என்னவோ....

இப்படிக்கு... தென்றல்

Monday, August 30, 2010

கருவின் முதல் பயணம்

நாம் எத்தனையோ பயணங்கள் செய்திருக்கிறோம்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமான பயணங்களாய் இருந்திருக்கும். பலரும் அறிந்திராத ஒரு "கரு"வின் பயணத்தை இங்கே கொடுத்துள்ளேன்.

ஆணின் உயிரணுவும்,பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒன்றாக உருவான  கரு, ஒரேயொரு செல்லாக கடுகு அளவில் இருக்கும். இந்தக் கரு உருவான 12  மணிநேரத்தில் அந்த செல் உடைந்து  இரண்டாக   பிரியும். அப்போது  கரு கொத்த மல்லி விதை அளவிற்கு, கரு பெரிதாகும்.

அடுத்த 12  மணிநேரத்தில் இரண்டுசெல், நான்குசெல்லாக பிரியும். மிளகு அளவுக்கு பெரிதாகும் .    அடுத்தடுத்த நாட்களில்,    இரண்டிரண்டு  மடங்காக செல்கள் பிரியப் பிரிய,ஐந்தாம் நாள் நீர்க்குமிழி அளவுக்கு இருக்கும்.  6-ம் நாள் அதே கரு நெல்லிக்காய் அளவுக்கு பெரிதாக மாறும். இப்படியே 100 செல்கள்  வரைபிரித்த பின்,   பெலோப்பியன் டியூப்  என்று சொல்லக்கூடிய கருக்குழாயில் இருந்து, கரு, கருப்பையை   நோக்கி நகரத் தொடங்குகிறது. இதுதான் கருவின் முதல் பயணம் .

கரு உருவாவது பெலோப்பியன் டியூப்பில்  தான். அது கொஞ்சம் பெரிதானதும் கர்ப்பப்பைக்கு வருகிறது. உருவான இடத்தில் இருந்து கர்ப்பப்பைக்கு வந்து சேர ஒரு வார காலம் அவகாசம் தேவைப்படுகிறது. சில பெண்கள் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று 30  நாட்களில்  முடிவு எடுத்து, 'டி  அண்ட் சி' செய்து கொள்ளும் போது, கரு பெலோப்பின்  டியுப்பிலே   இருந்து,கர்ப்பபைக்கு கரு வந்து சேராமல் போய்விட, கரு கலைப்பு நடை பெறாமலேயே போய்விடும். பின்னர் நிதானமாக வந்த கரு,  கருப்பையில் தங்கி வளர தொடங்குகிறது.

சில சமயங்களில் பெலோப்பியன் டியூப்பில் உருவான கரு கருப்பையை நோக்கி நகராமல் அதே இடத்திலேயே தங்கி வளர்ந்து விடுகிறது.இதற்கு பெலோப்பியன் டியூப்பில் ஏற்படும் தொற்று நோய்கள் தான்  காரணம். சாதாரணமாக கருவால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தானாகவே நகர முடியாது. பெலோப்பியன் டியூப்பில் ஒரு பகுதி கிட்டத்தட்ட ஒரு மண் புழு போல தசைகளை சுருக்கி விரிந்து  கொடுப்பதால் தான், கரு மெதுவாக நகர்ந்து போகும். நோய் பாதிப்பு இருந்தால், சுருங்கி விரியும் தன்மை இருக்காது.

சில பெண்களுக்கு பெலோப்பியன்  டியுப்பே       வளர்ந்து நெளிந்து இருக்கும். இந்த வளைவே கருவின் முதல் பயணத்தை தடை செய்கிறது. இந்த தடை சில நேரம், உயிருக்கே ஆபத்தாக முடியும். ஒரு மெல்லிய நூல் மட்டுமே உள்ளே நுழையும் அளவுக்கே, பெலோப்பியன் டியூப் இருக்கும். இது கருவின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னால் தாங்க முடியும் அளவுக்கு விரிந்து விரிந்து கொடுக்கும். முடியாமல் போகும் போது வெடித்துவிடும். கடுமையான வயிற்று வலியும், இரத்தப்போக்கும் ஏற்படும்.

இப்படி வெடித்து விட்டால், அந்தக் குழாய் மூலம், கருத்தரிக்கும் சந்தர்ப்பம், அந்த பெண்ணுக்கு வாழ்க்கை முழுவதுமே  இல்லாமல் போகும். மிச்சம் இருக்கும் இன்னொரு குழாய் முலமே கருத்தரிக்க முடியும்.கருவின் முதல் பயணம் மிக முக்கியமானது. அதில் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிப்பதற்கு, கருத்தரித்த உடனேயே டாக்டரிடம் சென்று சோதனை செய்து விடுவது நல்லது.

இப்படிக்கு...தென்றல்

ஒன்று முதல் ஒன்பது வரை....சிசு வளர்ச்சி

ஒரு சிசுவானது தாயின் கருவறையில் உருவான ஒன்றாம் மாதம் முதல், ஒன்பதாம் மாதம் வரை தான் எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை இங்கே கொடுத்துள்ளேன்.

ஒன்றாம் மாதம் :   பதியமாகும் கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும். சிசு மூன்று பாகங்களாகத் தெரியும். முதல் பாகம் : மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.   இரண்டாம் பாகம் : சுவாசக்கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் :  இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.

இரண்டாம் மாதம் :   சிசுவிற்கு முகம் உருவாகிறது.  கண் பகுதி குழி தோன்றும். மூளை,  இதயம்,  சுவாசப்பகுதி,  கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும்.  இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.

முன்றாம் மாதம் :    உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும்.  நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.

நான்காம் மாதம் :  தலைமுடி, புருவம்  போன்றவை  லேசாக  வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.

ஐந்தாம் மாதம் :   சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார்.  "லாலுனுகோ"  என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.

ஆறாம் மாதம் :   சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். வெள்ளை கிரீஸ் போலத் தோன்றும் "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில்
இருந்து குழந்தை  தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை
அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.

ஏழாம்  மாதம் :   குழந்தை கண் திறக்கும்.  எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.

எட்டாம் மாதம் :   நகம் வளரும். முடி வளர்ச்சி  அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி
தலைகீழாக  குழந்தை செல்லும்.

ஒன்பதாம் மாதம் :   ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.  பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.

இப்படிக்கு ...தென்றல்